Home /News /sports /

நான் எடுத்த முடிவுகளுக்கு மீடியாவில் அவர் மார்த்தட்டிக் கொள்கிறார்- சாஸ்திரியை சூசகமாகத் தாக்கும் ரஹானே

நான் எடுத்த முடிவுகளுக்கு மீடியாவில் அவர் மார்த்தட்டிக் கொள்கிறார்- சாஸ்திரியை சூசகமாகத் தாக்கும் ரஹானே

 ரஹானே

ரஹானே

2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவை கோலி சென்ற பிறகு வெற்றிப்பாதைக்குத் திருப்பிய அசாத்திய கேப்டன் ரஹானேதான். ஆனால் அணியை வெற்றிப்பாதைக்கு நகர்த்த ரகானே எடுத்த முடிவுகளையெல்லாம் தன்னுடைய முடிவுகளே என்று ரவி சாஸ்திரி மீடியாவில் மார்தட்டிக் கொண்டதை அனைவரும் அறிவர்.

மேலும் படிக்கவும் ...
  2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவை கோலி சென்ற பிறகு வெற்றிப்பாதைக்குத் திருப்பிய அசாத்திய கேப்டன் ரஹானேதான். ஆனால் அணியை வெற்றிப்பாதைக்கு நகர்த்த ரகானே எடுத்த முடிவுகளையெல்லாம் தன்னுடைய முடிவுகளே என்று ரவி சாஸ்திரி மீடியாவில் மார்தட்டிக் கொண்டதை அனைவரும் அறிவர். இதனை சூசகமாக சாஸ்திரி பெயரைச் சொல்லாமல் ரகானே ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  வழக்கமான கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவிலிருந்து தன் குழந்தை பிறப்பை முன்னிட்டு கிளம்பினார். அடிலெய்டில் தொடக்க டெஸ்ட்டில் அவமானகரமான தோல்வியின் ஏமாற்றத்தை பின்னுக்குத் தள்ளி மிகவும் கடினமான சூழ்நிலையில் ரஹானே கேப்டன் ஆனார்.

  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ரஹானே ஒரு அற்புதமான சதத்துடன் போராடித் திரும்பியதால், டெஸ்ட் வரலாற்றில் காணப்பட்ட மிகவும் நம்பமுடியாத திருப்பங்களில் ஒன்றாக அமைந்தது, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த கடினமான அணிக்கு எதிராக உடனேயே வெற்றி பெறுவதெல்லாம் சாதாரண காரியமல்ல.

  இந்நிலையில் பேக்ஸ்டேட்ஜ் வித் போரியா நிகழ்ச்சியில் ரஹானே கூறியதாவது:

  "நான் அங்கு என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியும். நான் யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. நானே பெருமை தேடிக்கொள்வது என் இயல்பு அல்ல. ஆம், களத்திலோ அல்லது டிரஸ்ஸிங் ரூமிலோ நான் எடுத்த சில விஷயங்கள் இருந்தன, ஆனால் அதற்கான கிரெடிட்டை வேறொருவர் எடுத்துக் கொண்டார்.

  எனக்கு முக்கியமானது என்னவென்றால், நாங்கள் தொடரை வென்றோம். அது ஒரு வரலாற்றுத் தொடர் மற்றும் எனக்கு அது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

  அதற்குப் பிறகு, நான் செய்த காரியங்களுக்கு தன்னை பீற்றிக் கொள்ளும் எதிர்வினைகளை பார்த்திருப்பீர்கல் அல்லது ஊடகங்களில் 'நான் இதைச் செய்தேன்' அல்லது 'இது எனது முடிவு' அல்லது 'இது எனது அழைப்பு' என்று கூறப்பட்டவற்றை பார்த்திருப்பீர்கள். "எனது பார்வயிலிருந்து , நான் களத்தில் என்ன முடிவுகளை எடுத்தேன் மற்றும் எனது உள்ளுணர்வின் அடிப்படையில் என்ன முடிவுகளை எடுத்தேன் என்று எனக்குத்தான் தெரியும், ஆனால் இதற்கான பெருமைகளை வேறொருவர் மார்தட்டிக் கொண்டார்” என்று சாடினார் ரஹானே.

  ரஹானே எந்த பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் அவரது கருத்துக்கள் அப்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதான ஒரு மறைமுகமான தாக்குதலாக இருக்கலாம் என்றே தெரிகிறது. அவர் அணியின் செயல்திறனுக்காக பரவலாகப் பாராட்டப்பட்டார் மற்றும் டிரஸ்ஸிங் அறை அப்போது மருத்துவமனை நோயாளிகள் வார்டு போல் இருந்ததாகவும் நான் தான்  மாற்றத்தின் சிற்பி என்று ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினார் ரவி சாஸ்திரி.

  உண்மையில், அந்த அற்புதமான வெற்றிகளுக்குப் பிறகு ரவி சாஸ்திரி இந்திய அணியின் ஒற்றைக் குரலாக மாறினார். கிரெக் சாப்பல் இப்படித்தான் மீடியாவை எதற்கெடுத்தாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைக்கு அழைத்து அணியையும் வீணடித்து தானும் வீணானார். ரவி சாஸ்திரி இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் அதுதான் நடந்திருக்கும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Ajinkya Rahane, India vs Australia, Ravi Shastri, Virat Kohli

  அடுத்த செய்தி