Home /News /sports /

கங்காரு வடிவ கேக்கை வெட்ட மறுத்த ரகானே! - களத்திற்கு வெளியேயும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை பறைசாற்றிய ஜென்டில்மேன்

கங்காரு வடிவ கேக்கை வெட்ட மறுத்த ரகானே! - களத்திற்கு வெளியேயும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை பறைசாற்றிய ஜென்டில்மேன்

ரகானே

ரகானே

ஆஸ்திரேலியாவின் சின்னமாக கங்காரு இருப்பதால் கங்காரு பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டுவது அந்நாட்டை அவமதிப்பதற்கு ஒப்பாகும் என்பதால் கேக்கை வெட்ட ரகானே மறுத்ததாக கூறப்படுகிறது.

கேப்டன் பொறுப்பேற்று ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்துவிட்டு நாடு திரும்பிய அஜிங்கியா ரகானே, நண்பர்களின் வற்புறுத்தலுக்கு மத்தியிலும் கங்காரு கேக்கை வெட்ட மறுத்து தனது பன்பை பறைசாற்றியுள்ளார்.

டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை கொண்ட சுற்றுப்பயணத்திற்காக கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் நாடு திரும்பியுள்ளது. இந்திய அணியின் வரலாற்றிலேயே நினைவுகூரத்தக்க சுவடுகளை இந்திய இளம் படை பதித்துள்ளது. விராட் கோலி மற்றும் மூத்த வீரர்கள் தொடரில் பங்கேற்க இயலாத சூழலிலும் ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி விதம் வியந்து பாராட்டப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ள நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட பல வீரர்கள் தங்களின் முத்திரையை இத்தொடரில் பதித்துள்ளனர்.

இதனிடையே நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு மாபெரும் வரவேற்பை ரசிகர்கள், குடும்பத்தினர் அளித்து வருகின்றனர். சேலம் சின்னப்பப்பட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவக் சிலாகித்து வியப்படைந்து பாராட்டியிருக்கிறார்.

ரகானே


அந்த வகையில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி வெற்றிக் கனியை பறித்து திரும்பியிருக்கும் கேப்டன் அஜிங்கியா ரகானேவுக்கு அவரின் சொந்த ஊரான மும்பை தாதரில் அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்புடன், பூக்கள் தூவி அவரை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் கங்காரு வடிவ கேக்கை ரகானேவை வெட்டவைக்க அவரின் நண்பர்கள் முடிவெடுத்தனர். இதற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட கேக்கை தயாரித்து நண்பர்கள், குடும்பத்தினர், அண்டை வீட்டாரை அழைத்து கேக்கை வெட்ட ரகானேவை அழைத்த போது. அவர் கங்காரு வடிவத்தை பார்த்து கேக்கை வெட்ட மறுத்துவிட்டார்.



ஆஸ்திரேலியாவின் சின்னமாக கங்காரு இருப்பதால் கங்காரு பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டுவது அந்நாட்டை அவமதிப்பதற்கு ஒப்பாகும் என்பதால் கேக்கை வெட்ட ரகானே மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published:

Tags: Ajinkya Rahane, Kangaroo

அடுத்த செய்தி