ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரஞ்சி தொடரில் இரட்டை சதம் விளாசி ரஹானே அசத்தல்... இந்திய அணியில் மீண்டும் வர ரசிகர்கள் ஆதரவு

ரஞ்சி தொடரில் இரட்டை சதம் விளாசி ரஹானே அசத்தல்... இந்திய அணியில் மீண்டும் வர ரசிகர்கள் ஆதரவு

ரஹானே

ரஹானே

ரஞ்சி தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரஹானே இரட்டை சதம் விளாசி அசத்தி உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது நடப்பு உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் இடம்பெறுவதற்கான கவனத்தை ஈர்க்கும் முக்கிய தொடராக ரஞ்சி கோப்பை இருந்து வருகிறது. ரஞ்சி தொடரில் அர்ஜூன் டெண்டுல்கர், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளனர். இவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார்.

மும்பை அணியின் கேப்டன் ரஹானே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 261 பந்துகளில் 201 ரன்கள் விளாசினார். இதில் 26 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ரஹானே தவிர மும்பை அணியில் யாஷ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி முறையே 162, 126 மற்றும் 90 ரன்கள் சேர்த்துள்ளனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 651 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்ட ரஹானே ஃபார்மில் இல்லாத காரணத்தால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து ரஹானே தற்போது நீக்கப்பட்ட நிலையில் இரட்டை சதம் அடித்து மீண்டும் தனது ஃபார்மை நிருபித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மீண்டும் இந்திய அணியில் நீங்கள் இடம்பெற வேண்டுமென்று ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

First published:

Tags: Ajinkya Rahane, Ranji Trophy