ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐசிசியின் டிசம்பர் மாத சிறந்த வீரர் 10விக். புகழ் அஜாஸ் படேல்

ஐசிசியின் டிசம்பர் மாத சிறந்த வீரர் 10விக். புகழ் அஜாஸ் படேல்

அஜாஸ் படேல்

அஜாஸ் படேல்

நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார், இதற்காக இவருக்கு டிசம்பர் 2021 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரர் கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார், இதற்காக இவருக்கு டிசம்பர் 2021 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரர் கிடைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்கள்கிழமையன்று அஜாஸ் படேலை டிசம்பர் 2021 ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றதாக அறிவித்தது. நியூசிலாந்தின், அஜாஸ் படேல் டிசம்பரில், வான்கடேயில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சரித்திரம் படைத்தார், ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்டில் அந்த சாதனையை எட்டிய மூன்றாவது வீரர் ஆனார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் டிசம்பர் மாதத்தில் ஒரே ஒரு டெஸ்டில் விளையாடினார், ஆனால் 16.07 சராசரியில் 14 விக்கெட்டுகளை எடுத்தார்.

அஜாஜ் படேல்

இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் படேல் அனைத்து 10 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சேதேஷ்வர் புஜாரா உட்பட நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். படேல் 14/225 என்று மும்பை டெஸ்ட்டை முடித்தார், இது 2021 இல் ஒரு டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சு ஆகும்.

படேலின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த ஐசிசி வாக்களிப்பு அகாடமி உறுப்பினர் ஜேபி டுமினி, “என்ன ஒரு வரலாற்று சாதனை! ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது கொண்டாடப்பட வேண்டிய சாதனை. அஜாஸின் இந்த பந்து வீச்சு சாதனை பல ஆண்டுகளாக நினைவில் நிற்கும் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.

Also Read: India vs South Africa 3rd test| விராட் கோலிக்கு பெரிய மைல்கல் சாதனை காத்திருக்கிறது- 3வது டெஸ்ட்டில் சாதிப்பாரா?

ஐசிசி ப்ளேயர் ஆஃப் தி மன்த் முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தங்களுக்குப் பிடித்த ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரசிகர்கள் தொடர்ந்து வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: India vs New Zealand