ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ஸ்ரீநாத்திற்கு பின்னர் இவர்தான்’ – இளம் வேகப்பந்து வீச்சாளரை பாராட்டும் அஜய் ஜடேஜா

‘ஸ்ரீநாத்திற்கு பின்னர் இவர்தான்’ – இளம் வேகப்பந்து வீச்சாளரை பாராட்டும் அஜய் ஜடேஜா

அஜய் ஜடேஜா - உம்ரான் மாலிக்

அஜய் ஜடேஜா - உம்ரான் மாலிக்

இந்தியா – இலங்கை அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை கவுகாத்தியில் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜவகல் ஸ்ரீநாத்திடம் இருந்த பந்து வீச்சு திறமையை இவரிடமும் பார்ப்பதாக, இளம் பவுலரை அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். நடந்து முடிந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் சில திறமையாளர்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் அக்சர் படேல் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளிலும் அவர் விளையாடிய விதம் ரசிகர்களையும், கிரிக்கெட் வல்லுனர்களையும் ஈர்த்துள்ளது.

இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா திறமையான கேப்டன்ஷிப்பை இந்த தொடரில் வெளிப்படுத்தியுள்ளார். 2ஆவது போட்டியில் அவர் கடைசி ஓவரை வீசியது பலரது பாராட்டை பெற்றது. இந்திய பவுலர் ஷிவம் மாவி,  இதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 3 போட்டிகளில் 106 ரன்களை விட்டுக் கொடுத்தாலும சில முக்கிய வீக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகளிலும் அவர் விக்கெட் எடுத்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அஜய் ஜடேஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு, களத்தில் அவர் ஓடும் விதம் ஆகியவற்றை கடந்த பல ஆண்டுகளாக எந்த இந்திய பந்து வீச்சாளரிடமும் நான் பார்க்கவில்லை.  இதனை ஜவகல் ஸ்ரீநாத்திடம் நான் பார்த்திருக்கிறேன். அதற்கு பின்னர் அவரைப் போன்ற சாயலில் உம்ரான் பந்து வீசுகிறார்.

அவரிடம் சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன. எனவே அவரை அதிகம் பயன்படுத்த வேண்டும். எதிரணி பவுலர்கள் பேட்டிங் செய்யும்போது உம்ரானை பயன்படுத்தினால் ஆட்டத்தை விரைவில் முடித்துக் கொடுத்து விடுவார். இதே முறையில் 10 ஆட்டங்களில் அவர் 8 தடவை 3 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா – இலங்கை அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை கவுகாத்தியில் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிரா… பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஃப்ரிடி நீடிக்க வாய்ப்பு…

இதில் டி20 போட்டிகளில் தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்ட கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடுகின்றனர்.

ஸ்பான்சர்கள், போட்டி ஒளிபரப்பு குறித்து முக்கிய முடிவு… பிசிசிஐ அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா விளையாடக்கூடிய ஒவ்வொரு ஒருநாள் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket