முகப்பு /செய்தி /விளையாட்டு / தென்னாப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்…

தென்னாப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்…

எய்டன் மார்க்ரம்

எய்டன் மார்க்ரம்

சமீபத்தில் எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இதில் மார்க்ரம் கேப்டனாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

தென்னாப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னாள் ஆல் ரவுண்டர் ஜே.பி. டுமினி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்படுகிறது.

டி20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். டெம்பா பவுமாவுக்கு பதிலாக மார்க்ரம் அணியை வழி நடதுவார்’ என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இதில் மார்க்ரம் கேப்டனாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டனாக டெம்பா பவுமா தொடர்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 16 ஆம் தேதி தொடங்குகிறது.  ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்சி, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், வியான் முல்டர், லுங்கி நிகிடி, ரியான் ரிக்கெல்டன், ஆண்டிலோ ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென். T20I அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகலா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜெல், வெய்ன் பர்பாடா, வெய்ன்சோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

First published:

Tags: Cricket