முகப்பு /செய்தி /விளையாட்டு / அகமதாபாத் டெஸ்ட்டில் 3ஆம் நாள் ஆட்டம் நிறைவு… 3 விக். இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது இந்திய அணி

அகமதாபாத் டெஸ்ட்டில் 3ஆம் நாள் ஆட்டம் நிறைவு… 3 விக். இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது இந்திய அணி

சுப்மன் கில் - விராட் கோலி

சுப்மன் கில் - விராட் கோலி

விராட் கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அகமதாபாத் டெஸ்டில் 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை குவித்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 422 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் எடுத்தார். அவருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்த கேமரூன் க்ரீன் 114 ரன்கள் எடுத்து அசத்தினார். 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்துள்ளது.

 

இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 91 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்திருந்தபோது, குன்மேன் சுழலில் லபுஸ்சேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 74 ரன்களை இந்திய அணி எட்டியபோது முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, புஜாராவுடன் இணைந்த தொடக்க வீரர் சுப்மன் கில் நிதானமான விளையாடி ரன்களை சேர்த்தார். 194 பந்துகளில் கில் சதம் அடித்து அசத்தினார். இதில் 10 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். 121 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்த புஜாரா மர்ஃபி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்

 

சிறப்பாக விளையாடிய சுப்மன்கில் 235 பந்துகளை எதிர்கொண்டு 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 1 சிக்சரும், 12 பவுண்டரிகளும் அடங்கும். இதன்பின்னர் இணைந்த விராட் கோலி – ரவிந்திர ஜடேஜா இணை நிதானமாக விளையாடியது. இன்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 289 ரன்களை குவித்துள்ளது. விராட் கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதால் இந்தப் போட்டி டிராவில் முடிவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Cricket