முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL Logo : மகளிர் ஐ.பி.எல்லுக்கான லோகோவை வெளியிட்டது பிசிசிஐ…

WPL Logo : மகளிர் ஐ.பி.எல்லுக்கான லோகோவை வெளியிட்டது பிசிசிஐ…

மகளிர் ஐபிஎல் லோகோ

மகளிர் ஐபிஎல் லோகோ

விரைவில் 5அணிகளின் கேப்டன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் எனப்படும் டபிள்யூ.பி.எல்.-க்கான லோகோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த லோகோ கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மகளிர் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. அகமதாபாத்தின் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை அதானி ஸ்போர்ட்ஸ்லைனும், மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டெல்லி அணியை ஜே.எஸ்.டபிள்யூ – ஜி.எம்.ஆர். கிரிக்கெட் நிறுவனமும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. அணிகள் உருவாக்கத்தை தொடர்ந்து வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர்.

போட்டியை முன்னிட்டு, வீராங்கனைகளை அணியில் எடுப்பதற்கான ஏலம் மும்பையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதற்கு முன்னதாக மகளிர் ஐபிஎல் தொடருக்கான லோகோவை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இந்த லோகோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்று நடத்தப்பட்ட ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா ரூ. 2.60 கோடிக்கு யு.பி. வாரியர்ஸ் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைச் சதம் அடித்து அசத்திய ஜெமிமா ரோட்ரிகஸை, டெல்லி அணி ரூ. 2.20 கோடிக்கு எடுத்துள்ளது. இந்திய அணியின் ஓபனிங் பேட்டர் ரூ. 2 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு வாங்கியுள்ளது. விரைவில் 5அணிகளின் கேப்டன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளனர்.

First published:

Tags: Cricket