“முதலில் கோபப்பட்டார், பின் கட்டியணைத்து பாராட்டினார்“ தோனி குறித்து தீபக் சாஹர் கருத்து

வெற்றிக்கு பின் இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலிதானமாக பந்துவீசியதாக அனைவரும் என்னை பாராட்டினார்கள்.

Vijay R | news18
Updated: April 8, 2019, 5:20 PM IST
“முதலில் கோபப்பட்டார், பின் கட்டியணைத்து பாராட்டினார்“  தோனி குறித்து தீபக் சாஹர் கருத்து
தீபக் சாஹருக்கு அறிவுரை கூறும் தோனி. (Twitter)
Vijay R | news18
Updated: April 8, 2019, 5:20 PM IST
பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி கட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் நோ பால்களாக வீசியதால் கூல் கேப்டன் தோனி பொறுமையை இழந்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய பஞ்சாப் அணி கடைசி ஓவரில் தோல்வி அடைந்தாலும் கணிசமான ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வீசினார்.

தொடர்ந்து அவர் 2 நோ பால்கள் வீசியதால் பொறுமை இழந்த கூல் கேப்டன் தோனி ஆக்ரேஷமாக சாஹருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சாஹர் துல்லியமாக பந்துவீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.தோனி ஆக்ரேஷமாக சாஹருக்கு அறிவுரை வழங்கிய காட்சி இணையத்தில் வைரலானது. இந்த நிகழ்வு குறித்து சாஹர் ஆங்கில ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், தோனி என் மீது மிகவும் கோபமாக இருந்தார். நான் பெரிய தவறு செய்து இருந்தேன். அவர் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.பின் யோசித்து நிதானாமாக பந்துவீசி ரன்குவிப்பை தடுத்தேன். வெற்றிக்கு பின் இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலிதனமாக பந்துவீசியதாக அனைவரும் என்னை பாராட்டினார்கள். தோனி சிரித்துக் கொண்டே என்னை கட்டி அனைத்து வெல் டன் (well done) என்று பாராட்டியதாக சாஹர் தெரிவித்துள்ளார்.கடைசி கட்டத்தில் தொடர்ந்து நோ பால்கள் வீசப்பட்டதற்கான காரணத்தையும் சாஹர் பகிர்ந்து கொண்டார். நான் மெதுவாக பந்துவீசவே (slow ball) முயற்சி செய்தேன், ஆனால் கைதவறுதலாக அது ஃபுல் டாஸ் பாலாக மாறியது.

மீண்டும் அதே முயற்சியில் பந்துவீச அதுவும் நோ பாலாக மாறியது எனக்கு மிகவும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக சாஹர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


Also watch

First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...