ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சச்சின், யூசுப் பதானை தொடர்ந்து இர்பான் பதானுக்கும் கொரோனா உறுதி!

சச்சின், யூசுப் பதானை தொடர்ந்து இர்பான் பதானுக்கும் கொரோனா உறுதி!

இர்பான் பதான்

இர்பான் பதான்

இந்திய ஜாம்பவான் அணியில் கொரோனாவால் பாதிக்கப்படும் 4வது வீரரானார் இர்பான் பதான்

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர், யூசப் பதான் என சாலைப் பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய வீரர்கள் ஒவ்வொருவராக கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அசுர வேக பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு 60,000ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பை மற்றும் ராய்பூரில் நடைபெற்று முடிந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய லெகென்ட்ஸ் (ஜாம்பவான்) அணியில் இடம்பிடித்திருந்த சச்சின் டெண்டுல்கர், யூசப் பதான், தமிழக முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இடனிடையே முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ஜாம்பவான் அணியில் கொரோனாவால் பாதிக்கப்படும் 4வது வீரரானார் இர்பான் பதான்.

இது தொடர்பாக இர்பான் பதான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எந்த வித அறிகுறியும் இன்றி கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளேன். என்னை நானே சுயதனிமைப்படுத்திக்கொண்டெஉ வீட்டிலேயே தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடார்பில் இருந்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் முகக் கவசம் அணிந்து , சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.” இவ்வாறு இர்பான் பதான் தெரிவித்தார்.

First published:

Tags: Cricket, Irfan Pathan, TN Assembly Election 2021