Chris Cairns| கிறிஸ் கெய்ன்சை தாக்கிய பக்கவாதம்: ஸ்ட்ரோக் ஏற்பட்டு சீரியஸ்

கிறிஸ் கெய்ன்ஸுக்கு ஸ்ட்ரோக்

நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ்க்கு சிட்னியில் நடத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சையினால் தற்போது ஸ்ட்ரோக் வந்து அவதிப்படுகிறார்.

  • Share this:
    நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ்க்கு சிட்னியில் நடத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சையினால் தற்போது ஸ்ட்ரோக் வந்து அவதிப்படுகிறார்.

    இடது கால் பக்கவாதத்தினால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
    இதனையடுத்து அவர் இன்னும் ஆபத்துக் கட்டத்தைக் கடக்கவில்லை, இதிலிருந்து மீள நீண்ட காலமாகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

    51 வயதாகும் கிறிஸ் கெய்ன்ஸுக்கு உடல்நலக்குறைவால் ஏராளமான அறுவை சிகிச்சைகள் இதற்கு முன் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் கேன்பெரேரா நகரில் வசித்து வரும் கெய்ன்ஸுக்கு இம்மாதத் தொடக்கத்தில் இதயத்தில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென மயங்கி விழுந்தார்.

    கேன்பெரேரா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கெய்ன்ஸுக்கு ஆக்சிஜன் உதவியோடு தீவிரமான சிகிச்சை தொடர்ந்து அளித்தும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கெய்ன்ஸுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை இதயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் திடீரென கெய்ன்ஸ்க்கு முதுகுத்தண்டில் ஸ்ட்ரோக்  ஏற்பட்டு, அவரின் இடதுகால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் முதுகுத்தண்டு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையில் கெய்ன்ஸுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கெனவே உடலின் முக்கிய ரத்த நாளம் கிழிந்து போனதாகத்தான் மிக முக்கிய அறுவை சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிறிஸ் கெய்ன்ஸ் உடல் நிலை சீரியஸ் ஆனால் நிலையாக இருக்கிறது என்று மருத்துவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உலகின் சிறந்த அதிரடி ஆல்ரவுண்டர்களுள் கெய்ன்ஸ் ஒருவர். 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகளில் அவர் நியூஸிலாந்துக்காக ஆடியுள்ளார். அதிரடி வீரர், இவர் இறங்கினால் பயப்படாத பந்து வீச்சாளர்களே இல்லை என்று கூற முடியும், இன்று அவர் உடல் நிலை இப்படி ஆகியுள்ளது. இவருக்காக ரசிகர்கள் மீண்டும் பிரார்த்தித்து வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: