2021 டி20 உலகக்கோப்பை தொடங்கும் போது இந்தியாதான் கோப்பையை வெல்லும் என்ற பேச்சு அடிபட்டது, கடைசியில் அடி வாங்கி முதல் சுற்றுடன் வெளியேறியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் ‘டெரர்’ இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியிடம் நோ-லாசில் தோல்வி அடைந்து பிறகு நியூசிலாந்துக்கு எதிராக 110 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வியுடன் இந்திய அணி திரும்பியது. மற்ற சொத்தை அணிகளிடம் வீரத்தை காட்டி வெற்றி பெற்று என்ன பயன்? வெளியேறியது இந்தியா. மாறாக பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை முன்னேறியது.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரேட் வாசிம் அக்ரம், ஷாஹீன் அப்ரீடியின் முதல் ஓவரில் விழுந்த இந்தியா, விராட் கோலி படை அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. ரோகித் சர்மாவை பாதம் பெயர்க்கும் யார்க்க்ரில் ஷாஹின் அஃப்ரீடி காலி செய்தார், ராகுலையும் காலி செய்து தொடக்க அடி கொடுத்தார் அஃப்ரீடி.
இது தொடர்பாக வாசிம் அக்ரம் ஊடகம் ஒன்றில் கூறிய போது, “இந்திய அணிதான் உலகக்கோப்பையை வெல்ல சாதகமான அணியாக இருந்தது, ஆனால் முதல் போட்டிக்குப் பிறகே, குறிப்பாக ஷாஹீன் அஃப்ரீடியின் முதல் ஓவருக்குப் பிறகே இந்தியாவினால் எழுந்திருக்க முடியவில்லை. அதன் பிறகு பார்த்தீர்கள், இந்திய அணியினர் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்ற பேச்சுக்கள் எழுந்ததையும் பார்த்தோம்.
மற்ற தனியார் டி20 லீகுகளில் இந்திய வீரர்கள் ஆடுவதை பிசிசிஐ நிறுத்தி வைக்கிறது, இதனால் மற்ற சர்வதேச வீரர்களுடன் ஆடும் அனுபவமில்லாமல் இருக்கின்றனர். பாகிஸ்தானும் இந்தியாவும் கிரிக்கெட் ஆடுவதில்லை, இதனால் ராவுஃப், ஷாஹின் அஃப்ரீடி, ஹசன் அலியை இந்திய வீரர்கள் ஆடவில்லை. இதுதான் பிரச்சனை.
அனைத்து வெளிநாட்டு லீகுகளிலும் இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டாம், ஒன்றிரண்டு லீகுகளில் அனுமதிக்கலாம். அப்போதுதான் பல தரப்பு பிட்ச்களில் பவுலர்களிடத்தில் ஆடும் அனுபவம் இந்திய வீரர்களுக்குக் கிடைக்கும். ஐபிஎல் நம்பர் 1 லீக்தான் இல்லை என்று கூறவில்லை ஆனால் பணத்தில் மட்டும்தான்., திறமையும் வெளிப்படுகிறது மறுக்கவில்லை.
இதையும் படிங்க: இளம் வயதில் 327 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்
ஆனால் ஒன்றிரண்டு வெளிநாட்டு லீகுகளில் இந்திய வீரர்கள் ஆட அனுமதிக்க வேண்டும்” என்றார் வாசிம் அக்ரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.