ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தை இழந்தது நியூசிலாந்து அணி…

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தை இழந்தது நியூசிலாந்து அணி…

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

இந்தியாவுடனான தொடருக்கு முன்பாக நியூசிலாந்து முதலிடத்திலும், இங்கிலாந்து 2ஆவது இடத்திலும் இருந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியுடனான தொடர் தோல்வியையடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணி முதலிடத்தை இழந்துள்ளது. புள்ளிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் 12 ரன்கள் வித்தியாசத்தில், திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 108 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வென்றது. இந்த நிலையில் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில்  நியூசிலாந்து முதலிடத்தை இழந்துள்ளது. இந்தியாவுடனான தொடருக்கு முன்பாக நியூசிலாந்து முதலிடத்திலும், இங்கிலாந்து 2ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 3ஆவது இடத்திலும் இந்தியா 4ஆவது இடத்திலும் இருந்தன.

இந்தியா உடனான தொடரை இழந்த பின்னர், நியூசிலாந்து அணி முதலிடத்தை இழந்து 2ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தர வரிசை பட்டியலில், தற்போது இங்கிலாந்து முதலிடத்திலும், நியூசிலாந்து 2ஆவது இடத்திலும், இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன.

First published:

Tags: Cricket