இந்திய கிரிக்கெட் அணியில் மேலும் 2 வீரர்களுக்குக் கொரோனா

இந்திய அணியில் கொரோனா தொற்று.

குருணால் பாண்டியாவை அடுத்து இலங்கை பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்குக் கொரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து பரபரப்பானது.

 • Share this:
  குருணால் பாண்டியாவை அடுத்து இலங்கை பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்குக் கொரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து பரபரப்பானது.

  லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர செகல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதியாகியுள்ளது. குருணால் பாண்டியாவுடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்களில் இவர்கள் இருவரும் இருந்தனர்.

  இதனையடுத்து குருணால் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த செகல், கிருஷ்ணப்பா கவுதம், பிரிதிவி ஷா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் சாகர், மணீஷ் பாண்டே, இஷான் கிஷன் ஆகியோர் கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடவில்லை.

  Also Read: MS Dhoni : தல தோனியின் கெத்தான நியூ ஹேர் ஸ்டைல் - வைரல் புகைப்படங்கள்

  இந்நிலையில் குருணாலுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 6 பேர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஒருவர் கொழும்புவிலேயே தங்கவைக்கப்படுகின்றனர். மற்றவர்கள் தாய்நாடு திரும்புகின்றனர்.

  குருணால் பாண்டியா கோவிட் சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்ற 6 வீரர்கள் அணிவிடுதியிலேயே தங்கி விட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து குருணால், செகல், கவுதம் ஆகியோர் 10 நாட்களுக்கு தனிமையில் இருப்பார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஹோட்டலிலேயே 7 நாட்கள் தனிமையில் இருக்கப் பணிக்கப்பட்டுள்ளனர்.

  இப்படி தொடர் கொரோனாவினால் ஐபிஎல் போட்டிகளில் ஆட ஏதாவது வீரர்கள் பாக்கியிருப்பார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: