கிரிக்கெட் வீரர் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச பதிவுகள்! ஹேக்கர்ஸ் அட்டூழியம்

ஷான் வாட்சனின் ட்விட்டர் பக்கம் கடந்த வெள்ளிக்கிழமை ஹாக் செய்யப்பட்டு தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டது.

கிரிக்கெட் வீரர் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச பதிவுகள்! ஹேக்கர்ஸ் அட்டூழியம்
ஷான் வாட்சன்
  • Share this:
சி.எஸ்.கே அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் ஷான் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷான் வாட்சன். ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியில் தொடக்க வீரராக களமிறங்கி வந்தார். கடந்த ஐ.பி.எல் தொரின் இறுதிப்போட்டியில் ரத்த காயத்துடன் விளையாடி சி.எஸ்.கே அணியின் வெற்றிக்காக போராடி ரசிகர்களின் மனதில் பெரிதும் இடம்பிடித்தவர் ஷான் வாட்சன்.

இவரது ட்விட்டர் பக்கம் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டு தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில நாட்களிலேயே அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், “எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டவிரோத புகைப்படங்களுக்கு மன்னிப்பு தெரிவித்து கொள்கிறேன். முதலில் எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. தற்போது எனது இன்ஸ்கிராம் பக்கம். இதுபோன்ற நிகழ்வுகளின் போது இன்ஸ்டாகிராம் நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும்“ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Watch : வீடியோ கால் அசிஸ்டெண்ட் தொழில்நுட்பம்! ஜியோவின் அசத்தல் அறிமுகம்

First published: October 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...