ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கம்… வைரலாகும் ஷிகர் தவானின் இன்ஸ்டா பதிவு

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கம்… வைரலாகும் ஷிகர் தவானின் இன்ஸ்டா பதிவு

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

மீண்டும் கூடுதல் பலத்துடன் அணிக்கு திரும்பி வாருங்கள் என்று தவானின் ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸமேன் ஷிகர் தவான்  நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 2 டெஸ்டிலும் வெற்றியைத் தேடித் தந்தனர். இதையடுத்து இலங்கை அணியுடனான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி பங்கேற்கவுள்ளது.

அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி புனேவிலும், கடைசி டி20 ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தாத நிலையில், அவரை இந்திய அணியில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷிகர் தவான், கர் தவான், ‘இது வெற்றி அல்லது தோல்வியைப் பற்றிய விஷயம் அல்ல. நாம் நம்முடைய முழு கடின உழைப்பையும் வெளிப்படுத்த வேண்டும். மற்றவை கடவுளின் கையில் உள்ளது’ என்று கூறியுள்ளார்.

இத்துடன் அவர் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். தற்போது அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
 
View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)தவானின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு இர்பான்பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் கமென்ட் செய்துள்ளனர். மீண்டும் கூடுதல் பலத்துடன் அணிக்கு திரும்பி வாருங்கள் என்று தவானின் ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளார்கள்.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி – 

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார்.

‘ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் தொடக்க வீரராக விளையாட வேண்டும்’ – கவுதம் காம்பீர் வலியுறுத்தல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி –  

ரிஷப் பந்த்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை… அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (வி.சி), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

First published:

Tags: Shikhar dhawan