• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பேட்டிங்கிலும் டக் அவுட்; அஸ்வினின் சர்ரே ‘சறுக்கல்’- கிண்டல் செய்த சர்ரே

பேட்டிங்கிலும் டக் அவுட்; அஸ்வினின் சர்ரே ‘சறுக்கல்’- கிண்டல் செய்த சர்ரே

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

இங்கிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சர்ரே அணிக்காக ஆடும் இந்திய ஸ்பின்னர் அல்லது ஆல்ரவுண்டர் அஸ்வின் விக்கெட்டுகள் எடுக்க திணறியதோடு பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

  • Share this:
    இங்கிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சர்ரே அணிக்காக ஆடும் இந்திய ஸ்பின்னர் அல்லது ஆல்ரவுண்டர் அஸ்வின் விக்கெட்டுகள் எடுக்க திணறியதோடு பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    சோமர்செட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய அஷ்வினுக்கு முதல் இன்னிங்ஸில் ஏமாற்றமே மிஞ்சியது. 43 ஓவர்கள் வீசிய அஷ்வின் 99 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இரண்டாவது நாள் அவருக்கு விக்கெட் விழவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் டாம் லேமன்பாய் விக்கெட்டை பவுல்டாக்கி வீழ்த்தினார்.

    Also Read: England vs Pakistan| 332 ரன் இலக்கை அசால்ட்டாக விரட்டிய இங்கிலாந்து- பாகிஸ்தானுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி- பாபர் ஆசம் 158 ரன் வீண்

    இதில் பந்து வீச்சில் 43 ஓவர் 9 மெய்டன் 99 ரன்கள் 1 விக்கெட் என்று ஏமாற்றமளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று பேட்டிங்கில் 6ம் நிலையில் இறங்கி முதல் பந்திலேயே ஜாக் லீச்சிடம் டெவன் கான்வேயிடம் கேட்ச் ஆகி டக்கில் வெளியேறினார் அஸ்வின்.

    இங்கிலாந்து டெஸ்ட் ஸ்பின்னரான ஜாக் லீச் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அஸ்வின் விக்கெட் எடுக்கத் திணறிய இதே பிட்சில் ஜாக் லீச் 5 விக்கெட்டுகள் எடுக்கிறார், சர்ரே அணியின் இந்திய வம்சாவளி ஸ்பின்னர் 3 விக்கெட்டுகள் எடுக்கிறார்!

    சர்ரே அணி 238 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள். முன்னதாக சோமர்செட் அணி தன் முதல் இன்னிங்சில் 429 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் சதம் அடித்தார். சர்ரே அணிக்காக ஆடிய மற்றொரு இந்திய வம்சாவழி ஆஃப் ஸ்பின்னர் குரமார் சிங் விர்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் அஸ்வினோ விக்கெட்டுகளை எடுக்க தத்தளித்தது சர்ரே அணியின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து பவுலிங்கிலும் சொதப்பி, பேட்டிங்கிலும் சொதப்பியுள்ளார் அஸ்வின். பவுலிங்கில் சொதப்பியதை சர்ரே அணியே இன்னும் விக்கெட் எடுக்கவில்லை' என்று குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜியோடு குறிப்பிட்டுள்ளது.

    Also Read:  South Africa vs Ireland | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து

    இந்தியாவின் குழிப்பிட்ச் சாதகம் உலகெங்கும் கிடைக்குமா? ஆஸ்திரேலியாவில் பிரமாதமாக வீசினார் அஸ்வின், பேட்டிங்கிலும் சிட்னியில் ட்ரா செய்தார். மிகபெரிய ட்ரா அது, ஆனால் இங்கிலாந்து என்றால் இந்திய அணிக்கும் சரி, அஸ்வினுக்கும் சரி என்னவோ ஆகிவிடுகிறது, ஒரே சொதப்பலாக முடிந்து விடுகிறது.

    அஸ்வினின் இந்த சர்ரே சறுக்கலை இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் நடக்கவிருக்கும் முன்னோட்டமாக பார்க்கின்றனர் இங்கிலாந்து ரசிகர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: