100-க்கு பிறகு 1,0 என்று எடுப்பவர் கிளாஸ் பிளேயரா? - கசப்புதான் ஆனாலும் உண்மை, ரஹானே குறித்து மஞ்சுரேக்கர் கருத்து

ரஹானே.

மெல்போர்ன் சதத்துக்குப் பிறகு ரஹானே 27 நாட் அவுட், 22, 4, 37, 24, 1 மற்றும் 0. இந்நிலையில்தான் மஞ்சுரேக்கர் ரஹானேவுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்று சாடியுள்ளார்.

 • Share this:
  ஆஸ்திரேலியாவில் அனுபவமற்ற அணியை வைத்துக் கொண்டு வெற்றி பெற்று வரலாறு படைத்தமட்டில் ரஹானேவுக்கு பாராட்டுகள் குவிந்தாலும் அவரது சொந்த பேட்டிங் பார்ம் நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வருகிறது என்பதையும் பலரும் கவனித்து வருகின்றனர்.

  சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி கண்டது. இந்த டெஸ்ட் போட்டியில் ரஹானே முதல் இன்னிங்ஸில் 1 ரன் எடுத்து டாம் பெஸ் பந்தில் ரூட்டிடம் கேட்ச் ஆனார்.

  இன்று வந்தவுடன் முதலில் எல்.பி. ஆகியிருப்பார். ஆனால் 3ம் நடுவரால் தப்பினார் ஆனால் அதே ஜேம்ஸ் ஆண்டர்சனின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துக்கு பவுல்டு ஆகி வெளியேறினார். குச்சி பறந்தது. டக் அவுட் ஆனார். அதே ஓவரில்தான் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி அரைசதம் எடுத்து இதே ரிவர்ஸ் ஸ்விங்கில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

  இது பெரிய திருப்பு முனையாகி ரிஷப் பந்த்தும் ஆண்டர்சன் பந்தில் ஜோ ரூட் கையில் ஏந்திக்கொடுத்து வெளியேறினார். ஒரு பொறுப்புள்ள அனுபவ வீரர் ரஹானே மெல்போர்னில் சதம் எடுத்த பிறகு சரியாக ஆடவில்லை என்பதே கசப்பான உண்மை.

  மெல்போர்ன் சதத்துக்குப் பிறகு ரஹானே 27 நாட் அவுட், 22, 4, 37, 24, 1 மற்றும் 0. இந்நிலையில்தான் மஞ்சுரேக்கர் ரஹானேவுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்றும் ஃபார்மில் இல்லாத வீரர்களின் சுமையையும் சுமக்க வேண்டிய வீரர் இப்படி ஆட்டமிழக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரஹானே மீது ஒரு கேப்டனாக எனக்கு என்ன பிரச்சனை என்றால் அவரது பேட்டிங் தான். மெல்போர்னில் சதமடித்த பிறகு அவரது ஸ்கோர் 27* 22, 4, 37, 24, 1, 0.

  சதமெடுத்த பிறகு கிளாஸ் பிளேயர்கள் தங்கள் பார்மை மேன் மேலும் முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்வர். பார்மில் இல்லாத வீரர்களின் சுமையையும் சேர்ந்து சுமப்பார்கள்” என்று ரஹானே கிளாஸ் பிளேயரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

  ரஹானே தன் ஆரம்பக்காலங்களில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதங்களை அடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு பார்ம் அவுட் ஆகி 2 ஆண்டுகள் கழித்து மெல்போர்னில் சதம் அடித்தார், இதற்குக் காரணம் கோலி அவரை உட்காரவைத்ததும் கூட. 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் 115 எடுத்தார்.

  சிட்னி டிராவில் 22 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவிட்டு கடைசியில் கமின்ஸிடம் வீழ்ந்தார். பிரிஸ்பனில் 329 ரன்கள் இலக்கை எதிர்த்து ஒரு தீவிர முனைப்புடன் இறங்கினார் ரஹானே, நேதன் லயன் பந்தை மேலேறி வந்து பெரிய மைதானத்தில் மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார். ஆனால் மீண்டும் கமின்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

  சென்னையில் இறங்கி முதல் இன்னிங்ஸில் ஃபுல்டாசை நேராக கையில் கேட்ச் கொடுத்தார், இரண்டாவது இன்னிங்சில் கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே பந்து புகுந்து ஆண்டர்சன் பந்தில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார்.

  ரஹானே இடம் கேள்விக்குறியாகும் முன் அவர் பார்முக்கு வருதல் முக்கியமானதாகும்.
  Published by:Muthukumar
  First published: