முகப்பு /செய்தி /விளையாட்டு / விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி… ட்ராக்டர் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி… ட்ராக்டர் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக 2021 ஜனவரி 8 ஆம் தேதி தோனி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில், ட்ராக்டரை இயக்கி தோனி விவசாயியாக மாறினார். இதுதொடர்பாக அவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுகிறார். சமூக வலைதளங்களில் தோனி இருந்தாலும், அதில் அடிக்கடி வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை பதிவு செய்வது கிடையாது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக 2021 ஜனவரி 8 ஆம் தேதி தோனி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இதன்பின்னர் எந்த பதிவும் அதில் இல்லாத நிலையில், இன்று மாலை வீடியோ ஒன்றை தோனி வெளியிட்டுள்ளார். இந்த சிறிய வீடியோவில் ட்ராக்டரை தோனி ஓட்டுவதுபோலும், அதனால் நிலத்தை உழுவது போன்றதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.




 




View this post on Instagram





 

A post shared by M S Dhoni (@mahi7781)



புதிதாக எதையாவது கற்றுக் கொள்வது என்பது நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வேலையை முடிப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது. என்று கிண்டலாக இந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் தோனி. இந்த வீடியோவில் கமென்ட் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ‘நீணட நாட்களுக்கு பின்னர் தல தரிசனம்’ என்று கூறியுள்ளது. தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். தோனியின் பதிவுக்கு கமென்டுகளும் குவிந்து வருகின்றன. இதன் மூலம் தோனிக்கு கார், பைக், டிராக்டர் என எதுவாக இருந்தாலும் டிரைவிங் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.

First published:

Tags: Cricket