2007-க்குப் பிறகு ஆஃப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட்டை மீண்டும் நடத்த முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இந்தியாவின் சிறந்த வீரர்களும் பாகிஸ்தானின் சிறந்த வீரர்களும் ஒரே அணியில் ஆடுவார்கள். அப்படி ஆஃப்ரோ ஆசியக் கோப்பை புத்துயிர் பெற்றால் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஷமியுடன் பாபர் அசாம், ரிஸ்வான், ஷாஹின் அப்ஃரீடி ஆகியோர் ஒரே ஓய்வறையைப் பகிர்ந்து கொள்வார்கள்.
2023-ல் ஆப்ரோ ஆசியக் கோப்பை கிரிக்கெட் நடக்கலாம் என்று தெரிகிறது. 2005-ல் ஆப்ரோ ஆசியக் கோப்பை நடைபெற்றது. முதல் முறை 3 ஒருநாள் போட்டி, பிற்கு 2007-ல் நடந்த ஆஃப்ரோ ஆசியக் கோப்பையில் ஒரு டி20யும் சேர்க்கப்பட்டது. ஆசிய லெவனுக்கும் ஆப்பிரிக்கா லெவனுக்குமான போட்டியாக இது அமையும்.
2005 தொடரில் சேவாக், ஷாஹித் அஃப்ரீடி ஓப்பனிங் இறங்கியதும் பவுலிங்கில் ஷோயப் அக்தர் ஒரு முனையிலும் ஜாகீர் கான் இன்னொரு முனையில் வீசியதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமன் ஆனது, ஜாகீர் கான் 3 போட்டிகளிலும் அற்புதமாக வீசினார். 2005-ல் இன்சமாம் ஆசிய லெவனுக்கு கேப்டனாக இருந்தார், அங்கு ஷான் போலாக் இருந்தார்.
2007-ல் மகேலா ஜெயவர்தனே ஆசிய லெவனுக்கும், ஜஸ்டின் கெம்ப் ஆப்பிரிக்க லெவனுக்கும் கேப்டனாக இருந்தனர். 2007- தொடரில் 3 போட்டிகளிலும் ஆசியா லெவன் வென்று ஒயிட்வாஷ் கொடுத்தது, இதில் 3வது போட்டியில் கேப்டன் மகேலா ஜெயவர்தனே 106 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 107 ரன்கள் எடுக்க நம் எம்.எஸ்.தோனி 81 பந்துகளில் சதம் கண்டு 97 பந்துகளில் 139 ரன்களை 15 பவுண்டரி 5 சிக்சர்களுடன் விளாசினார், இது சென்னையில் நடந்தது. ஆசிய லெவன் 331 ரன்கள் குவிக்க ஆப்பிரிக்கா லெவன் 318/7 வரை வந்து தோல்வி கண்டது. தொடரை ஆசிய லெவன் 3-0 என்று கைப்பற்றியது.
இந்நிலையில் ஆப்ரோ-ஆசியக் கோப்பை மீண்டும் புத்துயிர் பெற்றால் ஸ்டார்கள் மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் ஆசிய லெவனுக்குக் கேப்டன் பாபர் அசாமா, விராட் கோலியா அல்லது ரோஹித் சர்மாவா? ரசிகர்கள் தேர்வு என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, Cricket, MS Dhoni, Rohit sharma, Virat Kohli