• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Worldcup: பாகிஸ்தானுக்கு டேஞ்சர்: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சியளிக்குமா? - ஆம் என்கிறது கணிப்புகள்

T20 Worldcup: பாகிஸ்தானுக்கு டேஞ்சர்: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சியளிக்குமா? - ஆம் என்கிறது கணிப்புகள்

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி

  • Share this:
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021-ல் வெள்ளிக்கிழமையான இன்று 24வது போட்டியில் சுவாரசியமான ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் இந்த போட்டி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணி இந்தியா, நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்கு ஏறக்குறைய தகுதி பெற்று விட்டது. இன்று ஆப்கானுடன் தோற்றாலும் நமீபியா, ஸ்காட்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையும். ஆப்கானிஸ்தான் அணி அன்று ஸ்காட்லாந்தை நொறுக்கியது, இதன் மூலம் ரன் ரேட்டில் அதிகம் உள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிரடி பேட்டிங் பாகிஸ்தானின் பிரமாத பவுலிங்குக்கு எதிராக சமாளிக்குமா? அடிக்குமா அல்லது சரணடையுமா என்பதே இன்றைய சுவாரசியமான கேள்வியாக உள்ளது.

இந்தியாவை 151 ரன்களுக்கு மடக்கிய பாகிஸ்தான் பிறகு நியூசிலாந்தை 135 ரன்களுக்கு மடித்தது, பிறகு இலக்கை விரட்டியபோது இந்தியா அளவுக்கு நியூசிலாந்து பவுலிங் சுலபமாக இல்லை ஆனால் கடைசியில் ஆசிப் அலி 12 பந்துகளிலி 27 ரன்களையும் ஷோயப் மாலிக் 20 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்து 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி வென்றது. ஹாரிஸ் ராவுஃப், ஷாகின் அப்ரீடி, இமாத் வாசிம் போன்றவர்களை அடிப்பது ஆப்கானுக்குக் கடினம்தான்.

அதே போல் ஆப்கான் ஸ்பின்னர்கள் முஜிபுர் ரஹ்மான், ரஷீத் கான் என்ன சேதத்தை வேண்டுமானாலும் பாகிஸ்தான் பேட்ஸ்மென்களுக்கு ஏற்படுத்தலாம். ஆப்கானின் முதல் 3 பேட்ஸ்மென்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஆடக்கூடியவர்கள் அதுதான் பாகிஸ்தானுக்கு டேஞ்சர். இடது கை அதிரடி வீரர் ஹஸ்ரதுல்லா சசாய் அன்று 30 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். ஷஜாத் 15 பந்துகளில் 22 ரன்கள், குர்பாஸ் 37 பந்தில் 46 ரன்களையும், நஜ்புல்லா சத்ரான் 34 பந்துகலில் 59 ரன்களையும் விளாசினர். இவர்கள்தான் பாகிஸ்தானுக்கு டேஞ்சர்.

இன்று டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கையே தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கான் அணி சிக்ஸ், பவுண்டரிகள் அதிகம் அடிக்கும் பாதையை தேர்வு செய்துள்ளது, இது ஹை ரிஸ்க் ஆட்டாம், வந்தால் மலை போனால்... என்று கூறுவார்களே அந்த அப்ரோச்.

சிக்சர் மழையில் வெஸ்ட் இண்டீசுக்கு அடுத்து ஆப்கான்:

2016 உலகக்கோப்பை முதல் 2021 உலகக்கோப்பை வரை புள்ளி விவரங்களைப் பார்த்தால் டி20 போட்டிகளில் 12.91 பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் என்ற வகையில் வெஸ்ட் இண்டீஸ் ஆடிவருகிறது என்றால் ஆப்கானிஸ்தான் அணி இதே காலக்கட்ட டி20களில் 14.28 பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் என்று ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸின் டாட் பால் வீதம் 43.24 என்றால் ஆப்கான் அணி டாட் பால் வீதம் 38.12 என்று உள்ளது.

டாப் ஆர்டரில் உள்ள ஹஸ்ரத்துல்லா சசாய், ஷஜாத், குர்பாச், நஜ்புல்லா சத்ரான் ஆகியோரோடு அல்லாமல் கீழ்வரிசையில் முகமது நபி, ரஷீத் கான், குல்பதீன் நயீப் போன்றவர்களும் விளாசக்கூடியவர்கள். இடது வலது காம்பினேஷனில் அன்று இறக்கிய ஆப்கான் ஒரு புறம் குறைந்த தூர பவுண்டரியை எளிதில் இலக்காக்கியது. ஆனால் ஷார்ஜா போன்று துபாயில் சிக்ஸர்கள் அடிக்க முடியாது, கடினம்.

மேலும் இதுவரை ஒரேயொரு டி20 சர்வதேசப் போட்டியில்தான் ஆப்கான் - பாகிஸ்தான் மோதியுள்ளன, அதில் பாகிஸ்தான் வென்றது, உலகக்கோப்பை 2019-ல் பாகிஸ்தானை ஆப்கான் தண்ணி குடிக்க வைத்ததும் மறக்க முடியாது. ஆப்கான் அணி 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 142/5, 156/6 என்று ஆகி தோல்வி முகம் காட்டியது. கடைசியில் இமாத் வாசிம் 49 ரன்களையும் வகாப் ரியாஸ் 15 ரன்களையும் எடுக்க 49.4 ஓவர்களில் 230/7 என்று பாகிஸ்தான் போராடித்த்தான் வெல்ல முடிந்தது. இன்று இந்தப் போட்டியை ஆப்கான் அணி நினைவில் கொண்டு ஆட வேண்டும், பாகிஸ்தானும்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: