• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Nz vs Afg போட்டியில் இது நடந்தால் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது : சுனில் கவாஸ்கர்

Nz vs Afg போட்டியில் இது நடந்தால் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது : சுனில் கவாஸ்கர்

Afghanistan vs new zealand

Afghanistan vs new zealand

தற்போதைய நிலையில் இந்தியாவின் ரன்ரேட் தான் சிறந்ததாக இருக்கிறது

  • Share this:
உலகக் கோப்பை டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் இன்றைய போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இன்றைய போட்டி டி20 உலகக் கோப்பை தொடரில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் போட்டியாக இருக்கும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே அபுதாபி மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் லீக் ஆட்டம் தான் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறது. இந்திய அணி செமி ஃபைனலுக்கு முன்னேறுவதும், வெளியேறுவதும் இந்த போட்டியின் முடிவை பொறுத்துத் தான் அமையப் போகிறது. குருப்-1 பிரிவில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு இடங்களை பிடித்து ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குருப் 2 பிரிவில் தான் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

பரிதவிப்பில் இந்தியா:

குருப் 2 பிரிவில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில். இரண்டாவதாக அரையிறுதி வாய்ப்பு எந்த அணிக்கு என்பதே தற்போதைய பரபரப்புக்கு காரணம். பாகிஸ்தானிடன் தோல்வியடைந்த நியூசிலாந்தும், பாகிஸ்தான் மட்டுமல்லாது நியூசிலாந்துடனும் தோல்வி அடைந்த இந்தியாவும், ஆப்கானிஸ்தானுக்கும் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது.

Also read:  கிறிஸ் கெய்ல் சொன்ன குட் நியூஸ்.. நிம்மதியடைந்த ரசிகர்கள்..

இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிச் செல்லும், மாறாக தோல்வியடைந்து, இந்தியா நாளைய போட்டியில் நமீபியாவை வீழ்த்தினால் நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகளுமே தலா 3 வெற்றிகளுடன் சமநிலை பெறும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும். தற்போதைய நிலையில் இந்தியாவின் ரன்ரேட் தான் சிறந்ததாக இருக்கிறது என்பதால் நியூசிலாந்து அணி தோற்றால் இந்தியாவுக்கே சாதகமான வாய்ப்பு உள்ளது.

இதனிடையே இந்த போட்டி குறித்து சுனில் கவாஸ்கர் பேசியிருப்பதாவது, உலகக் கோப்பை டி20 தொடரிலேயே இந்தியா - பாகிஸ்தான் மோதலைக் காட்டிலும் இந்த போட்டி தான் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட போட்டியாக இருக்கப் போகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது இந்த துணைக் கண்டத்தில் பலரும் பார்க்கப்போகும் போட்டியாக இது இருக்கும்.

Also read:  பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!

ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது நியூசிலாந்து அணிக்கும் இந்த போட்டி நெருக்கடிமிக்கதாக இருக்கும். அதே நேரத்தில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பெரிய போட்டிகளில் நெருக்கடியை திறம்பட சமாளித்திருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். 2015, 2019ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் நியூசிலாந்து விளையாடி வெற்றுள்ளது.

நெருக்கடியை சமாளித்து ஆடிவிட்டால் நியூசிலாந்து இந்த போட்டியில் வெற்றிபெற்றுவிடும்  இல்லையென்றால் இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும் என என கவாஸ்கர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: