பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை!

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: July 11, 2019, 6:27 PM IST
  • Share this:
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்தாப் ஆலமுக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் அப்தால் ஆலம் விளையாடி வந்தார்.

இந்தியா - ஆப்பகானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அப்தாப் ஆலம் 54 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.


அப்தாப் ஆலம்


ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த சவுத்தாம்டன் மைதானத்தில் பெண் ஒருவருடன் அப்தால் ஆலம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டது.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அவர் மீது விசாரணை நடத்தியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறி அவர் செயல்பட்டது உறுதியானது. இதனால் உள்ளூர் மட்டும் சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒராண்டு தடை விதித்து உள்ளனர்.

Also Read : Video | பவுன்சர் பந்தில் சிக்கி தாடை கிழிந்தது... ரத்தக்காயத்துடன் களத்தில் இருக்கும் ஆஸி. வீரர்...!

Also Read : நடுவரின் தவறால் தோனி ரன் அவுட்? சர்ச்சைக்குள்ளான நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங்
First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading