துபாய் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 இல் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கைக்கு இது நினைவில் கொள்ள வேண்டிய நாள் என்பது ஒருபுறமிருக்க ஆப்கான் ரசிகர்கள் இலங்கை வெற்றியை இல்லை... இல்லை... பாகிஸ்தான் தோல்வியைக் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பானுக ராஜபக்ஷ 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இலங்கை அணியின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ஆனால் இலங்கை வெற்றியை தங்கள் வசமாக்கியது பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்களே.
இது ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அதே பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிதான் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டம் பெரிய சர்ச்சைகளில் முடிந்து, வீரர்களுக்குள் தகராறு முற்றி, பிறகு ரசிகர்கள் இடையே கைக்கலப்பு நடக்கக் காரணமானது. இதனால் பாகிஸ்தான் தோற்ற பிறகு இரவு தாமதமாக ஆப்கான் ரசிகர்கள் தலைநகர் காபூலின் தெருக்களில் இறங்கிக் கொண்டாடினர்.
இலங்கை அணி முதலில் பேட் செய்ய களமிறக்கப்பட்டது, அந்த அணி 8.5 ஓவர்களில் கேப்டன் தசுன் ஷனகாவையும் இழந்து 58/5 என்று தட்டுத்தடுமாறியது, ஆனால் இதன் பிறகு பாபர் அசாமின் கேப்டன்சி சோடை போனது, பவுலிங் சோடை போனதுக்கு காரணம், பனுகா ராஜபக்சதான். அவருடன் வனிந்து ஹசரங்கா டிசில்வாவும் சேர்ந்து ஸ்கோரை 170 ரன்களுக்குக் கொண்டு செல்ல உதவினார்.
Afghans across the world celebrate the well-deserved #AsiaCupCricket Championship victory by the great team of Sri Lanka @OfficialSLC. This is just one scene in Khost. Diversity, democracy and pluralism, and sports against intolerance and terrorism underpin the 🇦🇫🇱🇰 friendship. pic.twitter.com/2G8hg9GsSd
— Ambassador M. Ashraf Haidari (@MAshrafHaidari) September 11, 2022
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 4 ஓவர் 29 ரன் 3 விக்கெட்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இலக்கை விரைவில் எட்டிவிடும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் இலங்கையின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் பிரமோத் மதுஷன் லியனகமகே, பாபர் அசாம், பகர் ஜமான், இப்திகர் அகமது, கடைசியில் நசீம் ஷா விக்கெட்டுகளைக் கைப்பற்றி 34 ரன்களுக்கு 4 விக்கெட் என்று அசத்த ஹசரங்கா டிசில்வா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேலும் படிக்க: போய் இலங்கை அல்லது பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து வா: இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பால் அதிர்ச்சி
முகமது ரிஸ்வான் 49 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து 17வது ஓவரில் அவுட் ஆகும்போது பாகிஸ்தான் 110/5 அங்கிருந்து147 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். இந்நிலையில் பாகிஸ்தான் தோல்வியைக் கொண்டாடிய ஆப்கான் ரசிகர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.