உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெறும் 31 வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வங்கதேச அணியை பொருத்தவரை ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது என ஐந்து புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்தாலும் அரையிறுதி பந்தயத்தில் இருக்கிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பந்துவீச்சில் பலம் குறைந்த அணியாக இருந்தாலும் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறது. மூன்றாவது வீரராக களமிறங்கும் ஆல் ரவுண்டர் ஷகில் அல் ஹசன் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வருகிறார். மற்ற வீரர்களும் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வங்கதேசத்தின் வெற்றி உறுதியாகும்.
TOSS RESULT: Afghanistan win the toss and will bowl first!#RiseOfTheTigers #AfghanAtalan#CWC19 | #BANvAFG pic.twitter.com/6QfbEQDE3b
— Cricket World Cup (@cricketworldcup) June 24, 2019
ஆப்கானிஸ்தான் அணியை பொருத்தவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோல்வியுற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.