PAKvAFG | ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!

ICC World Cup 2019 | Pakistan vs Afghanistan | அரையிறுதி சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Web Desk | news18
Updated: June 29, 2019, 3:01 PM IST
PAKvAFG | ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!
PAKvAFG
Web Desk | news18
Updated: June 29, 2019, 3:01 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 36-வது லீக் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.  இந்தப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானை பொறுத்தவரை இதுவரை ஆடிய 7 ஆட்டங்களில், மூன்றில் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, கடைசியாக தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய உத்வேகத்தில் உள்ளது.


அரையிறுதி சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.

குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆப்கானிஸ்தான் அணியை அவ்வளவு எளிதாக எடைபோட முடியாது.

Loading...

Also Watch

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...