Home /News /sports /

டிவியில் ஹர்திக் பாண்ட்யாவை முத்தமிட்டு இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்…

டிவியில் ஹர்திக் பாண்ட்யாவை முத்தமிட்டு இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்…

டிவியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முத்தம் கொடுக்கும் ஆப்கன் ரசிகர்....

டிவியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முத்தம் கொடுக்கும் ஆப்கன் ரசிகர்....

Hardik Pandya : 17 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடிய ஆப்கன் ரசிகர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களிலும் வெளியேறினர்.

    பாகிஸ்தான் கதையை முடித்த அசால்ட் பாண்டியா! .. ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

    இதன்பின்னர் இணைந்த விராட்கோலி – ரவிந்திரா ஜடேஜா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. 35 ரன்கள் எடுத்திருந்தபோது நவாஸ் பந்துவீச்சில் இப்திகார் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் அதிரடி காட்ட, இந்திய அணி 19.4-ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. 17 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.



    ஹர்திக் பாண்ட்யா வின்னிங் ஷாட்டை அடித்த பின்னர் ஆப்கானிஸ்தானில் அதனை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் ஒருவர், டிவியில் தெரிந்த பாண்ட்யாவுக்கு முத்தம் கொடுத்து வெற்றியை கொண்டாடினார்.

    இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி