Home /News /sports /

சுழற்பந்தில் இப்படி ஒரு பவுன்சரா...! ரஷலையே தடுமாறி விழவைத்த இளம்பவுலர் - வீடியோ

சுழற்பந்தில் இப்படி ஒரு பவுன்சரா...! ரஷலையே தடுமாறி விழவைத்த இளம்பவுலர் - வீடியோ

Andre Russell | சுழற்பந்து தானே என்று ஹெல்மெட், தொப்பி என எதுவும் அணியாமல் விளையாடிய ரஷல் இந்த பவுன்சர் காரணமாக சற்று மிரண்டு போய் விட்டார்.

    ஆப்கன் சுழற்பந்துவீச்சாளரின் பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் ரஷல் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வெளியாகி உள்ளது.

    மேற்கிந்திய அதிரடி வீரர் ரஷலை தெரியாதவர்கள் யாராலும் இருக்க முடியாது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் ரஷல் விளையாடி வருகிறார். ரஷலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது.

    இறுதி ஓவர்களில் ரஷலின் அதிரடியை கட்டுப்படுத்த எதிரணி வீரர்கள் போராடி வருவார்கள். உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ரஷல் தற்போது அபுதாபியல் நடைபெற்று வரும் டி10 தொடரில் நார்தன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    டி10 தொடரில் பங்களா டைகர்ஸ் - நார்தன் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரஷல் பேட்டிங் செய்து கொண்டிருந்த 19 வயதான ஆப்கன் இளம் சுழற்பந்து வீச்சாளர் கைஸ் அஹ்மது பந்துவீசினார்.

    அந்த ஓவரில் அபாரமான ஒரு பவுன்சரை கைஸ் வீச இதை சற்றும் எதிர்பாராத ரஷல் நிலைதடுமாறி விழுந்து விடுவார். சுழற்பந்து வீச்சில் இப்படி ஒரு பவுன்சரை எந்த ஒரு சர்வதேச வீரரும் எதிர்கொள்ள முடியாத ஒன்று தான். வேகப்பந்து வீச்சுக்கு இணையான பவுன்சரை கைஸ் வீசினார்.



    சுழற்பந்து தானே என்று ஹெல்மெட், தொப்பி என எதுவும் அணியாமல் விளையாடி ரஷல் இந்த பவுன்சரை பார்த்து சற்று மிரண்டு போய் விட்டார். இந்த போட்டியில் கைஸின் 7 பந்துகளை சந்தித்த ரஷலால் ஒரு பவுண்டரி  மட்டுமே அடிக்க முடிந்தது.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி