#AUSvIND புஜாராவின் சதத்தால் முதல் நாள் முடிவில் இந்தியா 250/9 ரன்கள் சேர்ப்பு!

#Pujara ton saves India's blemishes on Day 1 | முதல் நாள் ஆட்டத்தில் பொறுமையாக விளையாடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 16-வது சதத்தைப் பதிவு செய்தார். #AUSvIND #CheteshwarPujara

Web Desk | news18
Updated: December 6, 2018, 2:32 PM IST
#AUSvIND புஜாராவின் சதத்தால் முதல் நாள் முடிவில் இந்தியா 250/9 ரன்கள் சேர்ப்பு!
சதம் அடித்த மகிழ்ச்சியில் பேட்டை உயர்த்திக் காட்டிய புஜாரா (AP Photo/James Elsby)
Web Desk | news18
Updated: December 6, 2018, 2:32 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (06.12.18) தொடங்கியது. அடிலெய்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் (2), முரளி விஜய் (11) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.




அடுத்து வந்த புஜாரா, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பவுன்சருக்கும், வேகத்திற்கும் சற்றும் பதற்றம் அடையாமல் புஜாரா விளையாடினார். ஒரு முனையில் கேப்டன் கோலி (3), ரகானே (13), ரோகித் சர்மா (37) ஆகியோர் விரைவில் நடையைக் கட்டினர்.
Loading...



மறுமுனையில் அனுபவ வீரரான புஜாரா இந்திய அணியின் தடுப்பு அரணாக இருந்தார். பொறுமையாக விளையாடிய அவர், டெஸ்ட் அரங்கில் தனது 16-வது சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன், டெஸ்ட் அரங்கில் 5000 ரன்களைக் கடந்தார். டெஸ்ட் அரங்கில் 5000 ரன்கள் என்ற மைல் கல்லைக் கடந்த 12-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார்.



ரிஷப் பண்ட் (25), அஸ்வின் (25) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியைச் சரிவில் இருந்த மீட்டெடுத்த புஜாரா 123 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட் கம்மின்ஸ் சிறந்த ரன் அவுட்டால் பரிதாபமாக வெளியேறினார்.



முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது. இஷாந்த் சர்மா 4 ரன்னுடனும், முகமது ஷமி 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில், மிச்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்