பிக் பேஷ் லீக்கில் பவுலர் ஆடம் சாம்பா மன்கட் முறையில் பேட்ஸ்மேன் டாம் ரோஜர்சை ஆட்டமிழக்க முயன்றார். இதற்கு அப்பீல் செய்யப்பட்ட நிலையில் அவுட் தர நடுவர்கள் மறுத்து விட்டனர். எல்லாம் சரியாக இருந்தும் எதற்கு அவுட் கொடுக்கப்படவில்லை என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு, நடுவர்கள் கொடுத்த விளக்கம் வியப்பை அளித்தது.
பவுலிங் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறும்போது, அவரை பவுலர் ரன் அவுட் ஆக்குவதற்கு மன்கட் என்று பெயர். இந்த முறையில் சர்ச்சைகள் இருந்தாலும், சமீபகாலமாக இந்த முறை ரிவ்யூக்கு கொண்டு செல்லப்பட்டு முடிவு தீர்மானிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பேஷ் டி20 லீக்கில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விக்கெட் அப்பீல் கேட்கப்பட்டது. மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆடம் ஸாம்பா, இந்த போட்டியின் கடைசி ஓவரின் 5 ஆவது பந்தை வீசியபோது, பவுலிங் முனையில் இருந்த பேட்ஸ்மேன் ரோஜர்ஸ் பந்துவீசும் முன்பாக கிரீஸை விட்டு வெளியேறினார். இதை கவனித்த ஸாம்பா, மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தார். இது, 3ஆவது நடுவரின் ரிவ்யூக்கு சென்றது.
மேலோட்டமாக பார்க்கும்போது எல்லாம் சரியாக இருந்து, அவுட் என்று அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பந்துவீசும்போது பவுலரின் கை, 90 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. இதை மீறி, 90 டிகிரியையும் தாண்டி ஸாம்பாவின் கை சென்றுள்ளது. இதன் அடிப்படையில் ரன் அவுட் கிடையாது என்று நடுவர்கள் முடிவை அறிவித்தனர்.
அதாவது பவுரின் கை, முன்னால் சென்று விடக்கூடாது என்பது விதிமுறை. அதற்காக இந்த 90 டிகிரி கோண அளவீடு கணக்கிடப்படுகிறது. ஸாம்பாவின் மன்கட் அப்பீலும், நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Spicy, spicy scenes at the MCG.
Not out is the call...debate away, friends! #BBL12 pic.twitter.com/N6FAjNwDO7
— KFC Big Bash League (@BBL) January 3, 2023
இந்த போட்டியில் ரினிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவர் வீசி 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளிய டாம் ரோஜர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket