Home /News /sports /

ஒரு கட்டத்தில் வீரர்களிடம் கூறிவிடுவதுதான் நல்லது, அதனால் சஹா கூறியதால் காயமடையவில்லை- ராகுல் திராவிட் ஓபன் டாக்

ஒரு கட்டத்தில் வீரர்களிடம் கூறிவிடுவதுதான் நல்லது, அதனால் சஹா கூறியதால் காயமடையவில்லை- ராகுல் திராவிட் ஓபன் டாக்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது ஓய்வு குறித்து பரிசீலிக்குமாறு தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கேட்டுக் கொண்டதாக விருத்திமான் சாஹா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

  ஒருவரை விட அதிகத் திறமை கொண்ட வீரர் கிடைத்து விட்டார் என்றால் அதற்கு முன்னால் உள்ள வீரர்களிடம் ஒரு மரியாதையாக அதை எடுத்துக் கூறி, அவருக்கு பிரியாவிடை போட்டி ஒன்றைக் கொடுத்து தக்க மரியாதையுடன் அனுப்புவதுதான் முறை, சஹாவுக்கும் அப்படி வாய்ப்பு கொடுத்து முடித்திருக்கலாம், ஆனால் அப்படியே புறமொதுக்குவதுதான் அவர்களின் கோபமாக மாறி, பிசிசிஐ, அதன் தலைவர் மற்றும் ராகுல் திராவிட் போன்றோரை அம்பலமேற்றும் நிலை ஏற்படுகிறது. சஹா போன்ற வீரர்களும் தங்களுடைய கிரிக்கெட் ஆட்ட வரம்பு என்ன என்பதை உணர்ந்து அதிகம் பேசாதிருப்பது நல்லது.

  தங்களுக்கே இப்படி நிகழ்ந்தவற்றைக் கண்டவர்கள்தானே இன்று பிசிசிஐ தலைமைப் பொறுப்பிலும் பயிற்சியாளர் பொறுப்பிலும் இருக்கின்றனர், எனும்போது இன்னொரு வீரருக்கு அப்படி நிகழ்வதை அவர்கள்தான் தடுக்க வேண்டும்.

  மூத்த கீப்பர் விருத்திமான் சாஹா தனது எதிர்காலம் குறித்து மிகவும் தான் தனிப்பட்ட உரையாடலில் தெரிவித்த ஆலோசனையை பொதுவெளியில் வெளிப்படுத்தியதால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் "காயம்" அடையவில்லை என்று அவரே கூறியுள்ளார்.

  தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது ஓய்வு குறித்து பரிசீலிக்குமாறு தலைமை பயிற்சியாளர் திராவிட் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக விருத்திமான் சஹா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

  இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது, “நான் உண்மையில் காயமடையவில்லை. விருத்தி மற்றும் அவரது சாதனைகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. எனது உரையாடல் அந்த இடத்திலிருந்து வந்தது. அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர் என்று நினைக்கிறேன்.

  இது நான் தொடர்ந்து வீரர்களுடன் உரையாடுவது பற்றியது. வீரர்களைப் பற்றி நான் சொல்வதை எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது அப்படி வேலை செய்யாது. நீங்கள் வீரர்களுடன் கடினமான உரையாடல்களை நடத்தத்தான் வேண்டும், ஆனால் அதற்காக அதை மூடி மறைக்க வேண்டும் என்றோ உரையாடல்களே நடத்தக் கூடாது என்றோ அர்த்தமல்ல.

  ஒவ்வொரு ப்ளேயிங் லெவன் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பும் அந்த உரையாடல்களை நடத்த வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன், மேலும் அவர்கள் ஏன் விளையாடவில்லை போன்ற கேள்விகளுக்குத் திறந்திருப்பேன். வீரர்கள் வருத்தப்படுவதும், புண்படுவதும் இயற்கையானது

  ரிஷப் பண்ட் எங்களின் நம்பர்.1 விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதால், இளைய விக்கெட் கீப்பரை நாங்கள் வளர்க்கப் பார்க்கிறோம் என்று தெரிவிக்க முயற்சித்தேன். இது விருத்தியின் மீதான எனது உணர்வுகளையோ மரியாதையையோ மாற்றாது."

  இதையும் படிங்க: என்னை ரிட்டையர் ஆகு என்றார் திராவிட், வாக்குறுதியை கங்குலி காப்பாற்றவில்லை- சஹா வேதனை பேட்டி

  எனக்கு எளிதான விஷயம் என்னவென்றால், அந்த உரையாடல்களை நடத்தாமல் இருப்பது மற்றும் அதைப் பற்றி வீரர்களிடம் பேசாமல் இருப்பது. ஆனால் நான் எப்படி அவ்வாறு இருக்க முடியும்? நான் அவ்வாறு இருக்கப் போவதில்லை.

  "னால் சில கட்டத்தில், நான் அந்த உரையாடல்களை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது என்பதை அவர்கள் ஒரு கட்டத்தில் மதிக்கத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் ராகுல் திராவிட்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Rahul Dravid, Wriddhiman Saha

  அடுத்த செய்தி