அம்பையரின் மோசமான முடிவு... டென்ஷனில் தனுஷ் போட்ட ட்வீட்!

#ICCWorldCup2019 | #AUSvWI | #ActorDhanush | எந்த சூழ்நிலையிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற கூடாது என நடுவர்கள் செயல்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்

அம்பையரின் மோசமான முடிவு... டென்ஷனில் தனுஷ் போட்ட ட்வீட்!
ICC World Cup 2019
  • News18
  • Last Updated: June 7, 2019, 8:04 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் மோசமான முடிவை கடுமையாக விமர்சித்து நடிகர் தனுஷ் ட்வீட் போட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றதற்கு நடுவர்களின் மோசமான முடிவே காரணம் என விமர்சிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியன் கிறிஸ் கெய்ல் அவுட்டானதும், நடுவரின் மோசமான முடிவும் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பை தொடரில் நடுவர்களின் மோசமான முடிவுகள் ஏமாற்றத்தை அளிப்பதாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என பலர் தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷூம் தனது ட்விட்டர் பக்கத்தில் நடுவரின் மோசமான முடிவு குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “எந்த சூழ்நிலையிலும் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற கூடாது என நடுவர்கள் செயல்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
நடுவர்களுக்கு வாழ்த்துகள். மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாடியது. நடுவர்களின் மோசமான முடிவுகளையும் ஐசிசி கவனிக்கவேண்டும். ஒரு சார்பாக நடுவர்கள் முடிவு எடுத்துள்ளதனர்“ என்றுள்ளார்.Also Watch

First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading