சுழல் ஜாலத்தில் 7 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த பிரபல வீரர் - வீடியோ

Vijay R | news18
Updated: August 8, 2019, 3:03 PM IST
சுழல் ஜாலத்தில் 7 விக்கெட்களை வீழ்த்தி  சாதனை படைத்த பிரபல வீரர் - வீடியோ
கொலின் அக்கர்மன்
Vijay R | news18
Updated: August 8, 2019, 3:03 PM IST
இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கொலின் அக்கர்மன் 7 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கவுண்டி டி20 கிரிக்டெ் போட்டியில் வார்விஷைர் - லீஸ்செஸ்டெர்ஷைர் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லீஸ்செஸ்டெர்ஷைர் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து வார்விஷைர் அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. போட்டியின் ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய வார்விஷைர் அணி தென்னாப்பிரிக்க வீரர் கொலின் அக்கர்மன் சுழலில் சிக்கி அடுத்ததடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.

இறுதியில் வார்விஷைர் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.அபராமாக பந்துவீசிய கொலின் அக்கர்மன் 7 விக்கெட்களை வீழ்த்தி கவுண்டி டி20 போட்டியில் சாதனை படைத்துள்ளார். மலேசியன் பந்துவீச்சாளர் அருள் சுப்பையா 5 ரன்களுக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தியதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்து வந்தது.

Also Read : #INDvWI: பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

Also Read : ரஞ்சி கிரிக்கெட் தொடரில் லடாக் வீரர்களின் நிலை என்ன? பிசிசிஐ அறிவிப்பு
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...