• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அகமதாபாத்தை தொடர்ந்து இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்த மேலும் ஒரு டெஸ்ட் போட்டி: ஒரு வாரத்தில் இரண்டாம் முறை!

அகமதாபாத்தை தொடர்ந்து இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்த மேலும் ஒரு டெஸ்ட் போட்டி: ஒரு வாரத்தில் இரண்டாம் முறை!

ஜிம்பாப்வே அணி

ஜிம்பாப்வே அணி

1889ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்த நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

  • Share this:
 

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி, இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்த நிலையில் துபாயில் நடைபெற்ற மேலும் ஒரு டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களுக்குள் முடிந்துள்ளது. ஒரே வாரத்தில் இரண்டே நாட்களில் முடிவு கிடைக்கும் 2வது டெஸ்ட் போட்டியாக இது அமைந்தது.

5 நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வருவது என்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது போல ஒரு வரலாற்று போட்டி தான் கடந்த வாரத்தில் அகமதாபாத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடைலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர முக்கியத்துவமான வெற்றியை இந்தியா ருசித்தது. இருப்பினும் இந்த வெற்றிக்கு பிறகு அமகதாபாத் ஆடுகளம் மீது உலகளாவிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. இன்றளவும் அகமதாபாத் ஆடுகளம் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாக விளையாட்டுத்துறையினரால் வர்ணிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடைலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்துள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று இம்மைதானத்தில் தொடங்கியது. கொரோனா காரணமாக மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அஃப்சர் ஸாஸய் 37 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் நாள் முடிவில் 135 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்தது. இரண்டாம் நாளான இன்று மீண்டும் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே எஞ்சிய 5 விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் சதம் அடித்து அசத்தினார்.

இதனையடுத்து 2ம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் பின்னர் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஜிம்பாப்வே 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளுக்கிடையிலான இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள்ளாகவே முடிவுக்கு வந்தது.

1889ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்த நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: