CRICKET ABU DHABI T10 LEAGUE SHIRTLESS ROHAN MUSTAFA CHASES THE BALL CONCEDES FOUR RUNS MUT
சட்டையை கழற்றியபடியே பந்தை பவுண்டரிக்கு விட்ட அபுதாபி வீரர்: வயிறு வலிக்கச் சிரித்த ரசிகர்கள், சக வீரர்கள்
ரோஹன் முஸ்தபா என்ற வீரர். டி20 லீக் அபுதாபி.
நிகோலஸ் பூரனின் வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. டீம் அபுதாபி 123 ரன்களை எடுத்து முதலில் பேட் செய்து ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய வாரியர்ஸ் 124/2 என்று வெற்றி பெற்றது.
உயர்மட்ட கிரிக்கெட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வளர்ந்து வரும் அணியாகும். அந்த அணியின் வீரர் ரோஹன் முஸ்தபா ஒரு முக்கியமான வீரர். இவர் ஒரு ஆல்ரவுண்டரும் கூட.
39 ஒருநாள் சர்வதெசப் போட்டிகள், 43 டி20 போட்டிகளில் ஆடியுள்ள 32 வயது ரோஹன் முஸ்தபா 1500 ரன்களை ஒரு சதம் 5 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் நடைபெறும் டி10 என்ற அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட டி20 லீக் போட்டியில் தன் அணியான டீம் அபுதாபிக்காக ஆடிக்கொண்டிருந்த போதுதான் இந்த சுவாரஸியச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் மைதானத்திலிருந்தவர்களுக்கு, போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு வயிறு வலி எடுக்கும் அளவுக்குச் சிரிப்பை வரவழைத்தது.
நாதர்ன் வாரியர்ஸ் அணிக்கும் அபுதாபி அணிக்கும் நேற்று நடந்த போட்டியில் வாரியர்ஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.பூரன் அணி 124 ரன்கள் இலக்கை விரட்டிக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு ஷாட் அடிக்கப்பட அது பவுண்டரிக்கு விரைந்தது, அங்கு பந்தைப் பிடிக்காமல் சட்டையை கழற்றி கொண்டிருந்தார் ரோஹன் முஸ்தபா. சட்டையை போட்டபடியே அவர் பந்தைத் தடுக்க முயன்று தோல்வி அடைந்தார், அது 4 ரன்களுக்குச் சென்றது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நிகோலஸ் பூரன் அடக்க முடியாமல் சிரித்து விட்டார். ரசிகர்கள், சக வீரர்கள் என்று அனைவரும் வயிறு வலிக்கும் வரை சிரித்தனர். ரோஹன் முஸ்தபாவின் இந்த சேட்டை பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
நிகோலஸ் பூரனின் வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. டீம் அபுதாபி 123 ரன்களை எடுத்து முதலில் பேட் செய்து ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய வாரியர்ஸ் 124/2 என்று வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் இந்த ஆட்டத்தில் சோபிக்காமல் ஏமாற்றிய நிலையில் ரோஹன் முஸ்தபாவின் சட்டையில்லாக் காட்சிதான் நேற்று ரசிகர்களுக்கு விருந்தானது.