• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆலன் பார்டரும் ஒருமுறை இப்படி அடித்துள்ளார்; வார்னரின் அந்த ஷாட்- ‘வெட்கக்கேடு’- கவுதம் கம்பீர் தாக்கு

ஆலன் பார்டரும் ஒருமுறை இப்படி அடித்துள்ளார்; வார்னரின் அந்த ஷாட்- ‘வெட்கக்கேடு’- கவுதம் கம்பீர் தாக்கு

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

வார்னர் மட்டுமல்ல ஒரு முறை ஆலன் பார்டர் இதை விடவும் மோசமான ஒரு பந்தை சிக்ஸ் அடித்ததும் உண்டு, அதையெல்லாம் யாரும் கண்டித்ததில்லை. அது ஒரு கேளிக்கையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் நேற்று துபாயில் ஆஸ்திரேலியா அணி இலக்கை விரட்டும்போது டேவிட் வார்னர், முகமது ஹபீஸ் வீசிய பந்து ஒன்று இரண்டு முறை பிட்ச் ஆகி வர அதை விடாமல் இறங்கி வந்து சிக்ஸ் விளாசினார். இது கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று இந்திய முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் இலக்கை விரட்டிய போது டேவிட் வார்னர் 8வது ஓவரில் இந்த ஷாட்டை அடித்தார். முகமது ஹபீஸ் வீசிய பந்து ஒன்று இருமுறை பிட்ச் ஆனது, அது உண்மையில் பவுலர் கையிலிருந்து தவறுதலாக வந்தது பொதுவாக அம்மாதிரி பந்தை யாரும் அடிக்க மாட்டார்கள், அப்படி அடிக்காமல் விட்டால் நடுவரும் அதை நாட் எ பால் என்றோ நோ-பால் என்றோ கூறலாம். ஆனால் இது நோ-பால் ஆனதோடு வார்னர் அதை விடாமல் விரட்டிப் போய் சிக்ஸ் விளாசினார். இப்படி சிக்ஸ் அடித்ததோடு நடுவரும் நோ-பால் என்றதால் ஃப்ரீ ஹிட்டும் கிடைத்தது.

    இந்த வீடியோ வைரலாக நெட்டிசன்களிடையே, குறிப்பாக மீம் மாஸ்டர்களின் கற்பனைகளை தூண்டி விட்டது. ஆனால் கவுதம் கம்பீர் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் அல்ல என்று வார்னரை சாடியுள்ளார். “என்ன ஒரு மோசமான ஆட்டம், என்ன ஒரு மோசமான ஸ்பிரிட் ஆஃப் தி கேம் வார்னர்! வெட்கக்கேடு” என்று வாசகமிட்டு அஸ்வினையும் டேக் செய்து அவரது கருத்தையும் கேட்டுள்ளார்.



    நிச்சயம் அஸ்வின் அந்த ஷாட்டை ஆதரிப்பார், ஏனெனில் இதில் என்ன தவறு? ரூல்படிதானே ஆடினார் என்பார், இது அனுமதிக்கப்பட்டதுதானே நானும் அடித்திருப்பேன் என்பார் அஸ்வின், ஆனால் அவர் பந்து இப்படி 2 பிட்ச் ஆனால் எதிரணி பேட்ஸ்மென் சிக்ஸ் அடித்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வார் என்பது தெரியவில்லை. வார்னர் மட்டுமல்ல ஒரு முறை ஆலன் பார்டர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பில் சிம்மன்ஸ் வீசிய இதை விடவும் மோசமான, கை நழுவிய ஒரு பந்தை சிக்ஸ் அடித்ததும் உண்டு, அதையெல்லாம் யாரும் கண்டித்ததில்லை. அது ஒரு கேளிக்கையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.



    இதை விட மோசமான ஸ்பிரிட் ஆஃப் தி கேம் மீறலையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கம்பீர் இதை சாடியிருப்பது ஆச்சரியமே. இது ஒரு மோசமான பந்து அடிக்கப்பட்டது அவ்வளவே அந்த அளவில்தான் அதைப் பார்க்க வேண்டும். இப்படியே போனால் கவுதம் கம்பீர், எந்த அணி ஜெயித்தாலும் என்ன ஜெயிக்கிறார்கள்? ஸ்பிரிட் ஆஃப் தி கேம் என்னாச்சு என்று கேட்பார் என ரசிகர்களால் கேலிக்குத்தான் ஆளாவார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: