பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் கிரைம் திரில்லர், மர்டர் மிஸ்டரி திரைப்படம் போல் அமைந்தது, கடைசியில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து, வாஷிங்டன் சுந்தர் பிரமாதமான சிக்சர், 2 பவுண்டரிகளுக்குப் பிறகு அவுட் ஆனது என்று என்ன ஆகும் என்று நாற்காலி முனைக்கு நகர்த்தியது. ஆனால் ரிஷப் பந்த் பிரமாதமாக தன் இன்னிங்ஸை கட்டமைத்தார்.
கடைசி ஒரு மணி நேரத்தில் அட்டாக்கில் இறங்கினார், நேதன் லயன் அவர் விக்கெட்டை எடுக்கும் முயற்சியைக் கைவிட்டு நெகெட்டிவ் பவுலிங் போடத்தொடங்கினார். அவருக்கு வெறுப்பு. ஒரு ஸ்டம்பிங்கை விட்டார் டிம் பெய்ன், மேலும் பை ரன்களையும் அவர் கொடுத்து கேப்டனாக மோசமாக கள வியூகம் அமைத்து மோசமான கீப்பிங் செய்து இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கையைத் தொடர்ந்து அளித்து வந்தார்.
காலையில் புஜாராவை அட்டாக் செய்யாமல் லெக் ஸ்டம்பிலேயே வீசி லெக் திசை பீல்டிங்கை மட்டும் வலுவாக வைத்திருந்தார், ஆனால் புஜாரா லெக் திசையில் ஸ்ட்ராங், மாறாக ஆஃப் ஸ்டம்ப், அதற்கு சற்று வெளியே வீசியிருந்தால் ஒருவேளை வீழ்த்தியிருக்கலாம், ஸ்லிப், லெக் கல்லி, சில்லி மிட் ஆன், சில்லி மிட் ஆஃப் என்று அட்டாக் செய்யத் தவறினார் டிம் பெய்ன். அநேகமாக அவரது கேப்டன்சியும் அணியில் அவரது இடமும் நாளைக்கு முடிவுக்கு வந்து விடும். அவரே அறிவித்து விடுவார்.
ஆஸ்திரேலிய அணிக்கு ஆடுவதென்றால் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றுவது போன்றது. அங்கு வெற்றி பெறும் குதிரைதான் நீடிக்க முடியும்.
இந்நிலையில் தொடரை தொடர்ச்சியாக 2வது முறையாக இழந்து, பிரிஸ்பன் கோட்டையையும் இந்தியா தகர்க்க அனுமதித்த டிம் பெய்ன் ஆட்டம் முடிந்து கூறியதாவது:
மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. இங்கு டெஸ்ட்டை வென்று தொடரையும் வெல்ல வந்தோம். முக்கியத் தருணங்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை என்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
இந்த இந்திய அணி கடினமான அணி, அவர்களால் தூக்கி எறியப்பட்டோம். வெற்றி பெற தகுதியான அணி இந்திய அணிதான். நிறைய விஷயங்களை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது, ஆனால் முடிந்தது முடிந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவில் பெரிய தொடர் காத்திருக்கிறது. இந்தத் தொடரில் சிறந்த அணியினால் தோற்கடிக்கப்பட்டோம்.
300 ரன்கள் இலக்கு நிர்ணயித்து ஒரு ஆசை காட்டி தொடரை வெல்ல திட்டமிட்டோம். மழை இல்லாவிட்டால் இன்னும் 20 ஓவர்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் இந்திய அணியினர் பந்து வரும் லைனுக்கு தங்கள் உடலை குறுக்காக வைத்தனர்.
ரிவியூக்கள் சில வேளைகளில் சாதகமாக இருக்கும் சில வேளைகளில் இருக்காது. ஆனால் இந்திய அணிக்குத்தான் பெருமை சேரும், நாங்கள் எல்லா முயற்சியும் செய்து பார்த்தோம் பயனில்லை, என்றார் டிம் பெய்ன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia, Rishabh pant, Tim Paine