ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்… நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் சேர்ப்பு…

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்… நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் சேர்ப்பு…

நவ்தீப் சைனி

நவ்தீப் சைனி

வங்கதேசம் ஏ அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் இந்திய வீரர் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து கவனம் பெற்றார். அவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிசெய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை இழந்தது. இதையடுத்து நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியானது நாளை மறுதினம் டிசம்பர் 14ம் தேதி தொடங்கி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ஆம் தேதி ஆரம்பமாகிறது. இவ்விரு போட்டிகளிலும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகின்றன.

ரசிகருக்கு வித்தியாசமான முறையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி… வைரல் வீடியோ…

இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாட நவ்தீப் சைனி, அபிமன்யு ஈஸ்வரன், ஜெயதேவ் உனாத்கட் மற்றும் சவுரப் குமார் ஆகிய 4 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது.

இந்திய வீரர்கள் முகமது சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக உனாத்கட் மற்றும் சவுரப் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து நவ்தீப் சைனியும் அணியில் இடம் பெற்றிருப்பதாக தற்போது அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டுக்கு பின்னர், நவ்தீப் சைனி ஓராண்டாக இந்திய அணிக்காக விளையாடவில்லை.

''நன்றி போர்ச்சுகல்..என் கனவு முடிவுக்கு வந்தது'' - கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பதிவு!

இதேபோன்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டிருப்பதால், அவரும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்தான் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரோகித் ஷர்மா தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வங்கதேசம் ஏ அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் இந்திய வீரர் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து கவனம் பெற்றார். அவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ரோஹித் இடம் பெறாவிட்டால், அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் அணியை வழிநடத்துவார். சித்தேஸ்வர் புஜாரா துணை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள் விபரம் -

கே.எல். ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட்கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்

First published:

Tags: Indian cricket team