உங்களது தைரியத்துக்கு தலை வணங்குகிறேன்: அபிநந்தனை உருக்கமாக வரவேற்ற சேவாக்!
#Abhinandan returns to India: Virender Sehwag Welcome Message | அபிநந்தனை வரவேற்று சேவாக் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பலர் பகிர்ந்து வருகின்றனர். #WelcomeBackAbhinandan

அபிநந்தன் மற்றும் வீரேந்திர சேவாக்.
- News18
- Last Updated: March 1, 2019, 7:13 PM IST
தாய் நாடு திரும்பிய இந்தியாவின் வீர மகன் அபிநந்தனை, முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உருக்கமாக வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக போர் விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 
இந்திய விமானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று (மார்ச் 1) அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்.
லாகூரில் இருந்து காரில் அழைத்துவரப்பட்ட அபிநந்தன், மாலை 5.30 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், அபிநந்தனை வரவேற்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
அதில், “உங்களைப் பெற்றதால் நாங்கள் எவ்வளவு பெருமை அடைகிறோம்!, உங்களது திறமைக்கும், தைரியத்துக்கும் தலை வணங்குகிறேன் நாங்கள் உங்களை விரும்புகிறோம்.ஏனென்றால், நீங்கள் அவ்வளவு பெருமைக்குரியவர்,” என்று சேவாக் உருக்கமாக கூறியுள்ளார்.
அபிநந்தனை வரவேற்று சேவாக் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
ஆஸி.க்கு பதிலடி கொடுக்க இந்திய அணியில் முக்கிய மாற்றம்!
Also Watch...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக போர் விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன்.
இந்திய விமானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று (மார்ச் 1) அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

உலக அளவில் ட்விட்டரில் டிரெண்டான #WelcomeBackAbhinandan
அதில், “உங்களைப் பெற்றதால் நாங்கள் எவ்வளவு பெருமை அடைகிறோம்!, உங்களது திறமைக்கும், தைரியத்துக்கும் தலை வணங்குகிறேன் நாங்கள் உங்களை விரும்புகிறோம்.ஏனென்றால், நீங்கள் அவ்வளவு பெருமைக்குரியவர்,” என்று சேவாக் உருக்கமாக கூறியுள்ளார்.
How proud we are to have you ! Bow down to your skills and even more your grit and courage 🙏 #WelcomeBackAbhinandan . We love you and are filled with pride because of you.#WeAreSupposedToTellYouThis pic.twitter.com/IfqBFNNa3T
— Virender Sehwag (@virendersehwag) March 1, 2019
அபிநந்தனை வரவேற்று சேவாக் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
ஆஸி.க்கு பதிலடி கொடுக்க இந்திய அணியில் முக்கிய மாற்றம்!
ரோகித்தை ஓராங்கட்டி சிக்சரில் சாதனை படைத்த தல தோனி!
Also Watch...