Home /News /sports /

கிரிக்கெட்டில் உண்மையில் பரிதாபமானவர்கள் பீல்டர்களே - ஏ.பி.டிவில்லியர்ஸ் வேதனை

கிரிக்கெட்டில் உண்மையில் பரிதாபமானவர்கள் பீல்டர்களே - ஏ.பி.டிவில்லியர்ஸ் வேதனை

ஏ.பி.டிவில்லியர்ஸ்

ஏ.பி.டிவில்லியர்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டர்கள் உண்மையில் பரிதாபம் என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டர், பவுலர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆதரவும் புகழும் பீல்டர்களுக்குக் கிடைப்பதில்லை என்று உணர்கிறார் ஏபிடி.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டர்கள் உண்மையில் பரிதாபம் என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டர், பவுலர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆதரவும் புகழும் பீல்டர்களுக்குக் கிடைப்பதில்லை என்று உணர்கிறார் ஏபிடி.

    ஒரு பிரமாதமான கேட்ச் ஒரு அணியின் ஸ்கோரை 400லிருந்து 250 ஆகக் குறைக்கும். அதே தான் ட்ராப் கேட்சும், 250 ரன்கள் ட்ராப் கேட்சால் 400 ஆகக்கூட அதிகரிக்கும். எனவே பீல்டிங் மிக மிக முக்கியமான ஒன்று என்கிறார் டிவில்லியர்ஸ்.

    டெஸ்ட் கிரிக்கெட் அல்லது எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பீல்டர்கள் மணிக்கணக்கில் பீல்டிங்கில் வெயிலில் காய்கின்றனர், அதற்கான ஒரு பெருமை அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. பெருமையை சேர்ப்பதில்லை. ஆட்டத்தின் போக்கையே மாற்றும் ஒரு கேட்சை பீல்டர் ஒருவர் கண்சிமிட்டும் நேரத்தில் எடுத்து விடுகிறார், ஆனால் அவருக்குக் கிடைப்பதெல்லாம் முதுகில் ஒரு ஷொட்டு அவ்வளவுதான் என்றார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

    ஆனால் கேட்சை விட்டாலோ, மிஸ் பீல்டிங் செய்தாலோ பீல்டர்களுக்கு மன்னிப்பே கிடையாது, இது எப்படி இருக்கிறது என்கிறார் ஏபிடி.

    “டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்சிங்கிற்கு அதிக முக்கியத்துவம், அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. இதுதான் 250 ஆல் அவுட்டுக்கும் 400+ ரன்களுக்கும் உள்ள வித்தியாசம். 6-7 மணி நேரம் காய்ச்சும் வெயிலில் எப்போதும் இடைவிடா கவனத்துடன் இருக்கும் பீல்டர்களுக்கு உரிய பாராட்டு கிடைப்பதில்லை.

    பிறகு கண்சிமிட்டும் நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் கேட்சையும் அவர் எடுக்க வேண்டும். மன்னிப்பேயில்லாத ஒரு வேலை பீல்டிங் வேலை. நிறைய அழுத்தங்கள் ஆனால் பரிசுகளோ இல்லை. வாரியத்தில் கவுரவம் அளிக்கப்படுவதுமில்லை.

    குட் கேட்ச் என்று முதுகில் ஒரு ஷொட்டு அவ்வளவுதான் ஒரு மேட்சை மாற்றும் கேட்சுக்கு அதிகபட்சமாக கிடைக்கும் பெருமை. ஆனால் கேட்சை விட்டாலோ சகவீரர்களின் ஒரு கொடூரமான மவுனம், ரசிகர்களின் கேலி இதையும் எதிர்கொள்ள வேண்டும்” என்று இரண்டு ட்வீட்களில் ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    உண்மையில் அவர் பீல்டர்கள் நிலைமை பரிதாபம் என்று வேதனைப்படுவது தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: AB de Villiers, Cricket

    அடுத்த செய்தி