“காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வெல்லுவோம்“ ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்

India vs Australia | ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் காட்டுத்தீயால் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

“காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வெல்லுவோம்“ ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்
  • Share this:
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சோகத்தை போக்குவதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம் என ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.

இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியா வந்தனர். முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வருமு் 14ம் தேதி தொடங்க உள்ளது.

மும்பை போட்டிக்கு முன் செய்தியாளர்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் சந்தித்தார். அப்போது, “இந்திய அணியை சொந்த மைதானத்தில் எதிர் கொள்வது சிரமமான ஒன்று தான். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற தொடரை நாங்களை் கைப்பற்றினோம். எனவே அதேப் போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.


ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் காட்டுத்தீயால் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம்“ என்றார்.

ஆஸ்திரேலிய அணி கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading