ஷேன் வார்னிடமிருந்து வந்த கடைசி மெசேஜ், அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன் -கில்கிறிஸ்ட் உருக்கம்
ஷேன் வார்னிடமிருந்து வந்த கடைசி மெசேஜ், அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன் -கில்கிறிஸ்ட் உருக்கம்
வார்ந் கில்கிறிஸ்ட்
தாய்லாந்தில் சந்தேகத்திற்கிடமான மாரடைப்பால் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மறைந்த ஷேன் வார்ன் தனக்கு அனுப்பிய மெசேஜை ஆடம் கில்கிறிஸ்ட் வெளிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து சோகத்தை வெளிப்படுத்திய வார்னின் அதிர்ச்சி மரணம் ஆஸ்திரேலிய அணியினர் தாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை நினைவு கூரச் செய்துள்ளது.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஷேன் வார்னுடன் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார். மறைந்த ராட் மார்ஷுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கில்கிறிஸ்ட் தயாரித்த வாழ்த்துரையை புகழ்ந்து ஷேன் வார்ன் அவருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஏபிசி நியூஸ்-க்காக கில்கிறிஸ்ட் கூறும்போது, “ஒரு வாரம் முன்புதான் ஷேன் வார்னுடன் பேசினேன். அவரிடமிருண்டு அருமையான மெசேஜ் ஒன்று வந்தது. அவர் இறப்பதற்கு 8 மணி நேரம் முன்னதாக இந்த மெசேஜை அவர் அனுப்பியிருக்கலாம். என்னுடைய க்ளோஸ் சர்க்கிளில் என்னை ‘சர்ச்’ என்று அழைப்பார்கள். இதனால் என்னை செல்லமாக எரிக் கில்சர்ச் என்றே சிலர் அழைப்பார்கள், வார்னும் என்னை ‘சர்ச்சி’ என்றே அழைப்பார். அவர் அப்படி அழைக்கும்போது நட்பின் நெகிழ்ச்சி இருக்கும்.
அவர் தன் மெசேஜில், ‘சர்ச்சி (கில்கிறிஸ்ட்), ராட் மார்ஷுக்கு நீ செய்த அஞ்சலி அருமை’ என்றார். என்னுடைய குழந்தைப் பருவ ஹீரோ ராட் மார்ஷுக்கு நெருக்கமாக நாம் இருவருமே வரவில்லை. வெல் டன் சார் என்று வார்னே எனக்கு கடைசியாக மெசேஜ் செய்திருந்தார். அதுதான் கடைசி தொடர்பு. அந்த டெக்ஸ்ட் மேசேஜை நான் ஒருநாளும் டிலீட் செய்ய மாட்டேன்.
ஷேன் வார்ன் பந்து வீச்சுக்கு விக்கெட் கீப்பிங் செய்ததே எனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது. ஒரு மாஸ்டர் பணி செய்யும் போது அவரை அருகில் இருந்த இரண்டு பாக்கியசாலிகள் நானும் இயன் ஹீலியும்தான். அவர் தொப்பியைக் கழற்றி விட்டால், பந்து வீச வரப்போகிறார் என்று அர்த்தம். அதன் பிறகு அவர் செய்யும் அட்டகாசம் ஒரு நாடகம்தான். அவர் திரைப்பட இயக்குநர் போல்தான் செயல்படுவார். ஸ்பீல்பர்க் போன்ற ஆளுமை ஷேன் வார்ன். ஷேன் வார்னுடன் கீப்பர்-பவுலர் உறவே ஒரு தனி ரகம், மறக்க முடியாதது அது. ” இவ்வாறு கூறினார் கில்கிறிஸ்ட்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.