Video: கே.எல் ராகுலை பாராட்டிய அம்பையர்... எதற்கு தெரியுமா?

3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது

Video: கே.எல் ராகுலை பாராட்டிய அம்பையர்... எதற்கு தெரியுமா?
3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது
  • News18
  • Last Updated: January 5, 2019, 2:15 PM IST
  • Share this:
மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டியின் போது ராகுல் கேட்ச் பிடிக்க முயற்சி செய்து பின்னர் பந்து தரையில் பட்டதாக தாமே அறிவித்ததை பார்த்து அவரை அம்பையர் பாராட்டினார்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரண்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர்.


இந்திய அணி சார்பில் புஜாரா 193 ரன்களையும், ரிஷப் பண்ட் 159 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், வெளிநாட்டு மண்ணில் 150 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என பல சாதனைகளை படைத்தார் ரிஷப் பண்ட்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட். (BCCI)


இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 24 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஜடேஜா வீசிய 14.1-வது ஓவரில் மார்கஸ் ஹாரிஸ் அடித்த பந்தை கே.எல்.ராகுல் கேட்ச் பிடித்தார்.இந்திய வீரர்கள் அதை கொண்டாடிய போது, கே.எல்.ராகுல் தாமாக முன்வந்து பந்து தரையில் பட்டு விட்டது, இது கேட்ச் அல்ல என்று தெரிவித்தார், இதைபார்த்த அம்பையர் அவரின் செயலை வெகுவாக பாராட்டினார்.



இதையடுத்து 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது இந்திய அணி 386 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

Also see

First published: January 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading