• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 'இதுதான் என் முதல் அனுபவம்' பார்பர்ஷாப் பெண்களை கௌரவித்த சச்சின்!

'இதுதான் என் முதல் அனுபவம்' பார்பர்ஷாப் பெண்களை கௌரவித்த சச்சின்!

Sachin Tendulkar

Sachin Tendulkar

சமூகத்தில் ஆண், பெண் என்ற பேதம் எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும் இந்த விளம்பரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விளம்பரம் மூலமாக புரட்சி செய்த ஜில்லெட் நிறுவனத்தின் வீடியோவை பார்த்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஷேவ் செய்துள்ளார்.

இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்று நினைக்கலாம்.

அவர் ஷேவ் செய்தது சலூன் கடையில் இருந்த பெண்ணிடம். அதுமட்டுமல்ல சச்சின் இதுவரை மற்றவர்களிடம் ஷேவ் செய்ததே இல்லை என்றும் இது தான் அவரது முதல் அனுபவம் என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஜில்லெட் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த விளம்பரத்தை இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர். அப்படி என்ன தான் அந்த விளம்பரம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.?



உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பன்வாரி டோலா என்னும் குக்கிராமத்தில் வசிக்கக் கூடிய பெண்கள்தான் ஜோதி மற்றும் நேஹா. அவர்கள் தந்தையின் இறப்பிற்குப் பின் சோர்ந்து போகாமல் நம்பிக்கையுடன், தன் தந்தை பிடித்த சவரக் கத்தியை இரண்டு பெண்களும் பங்குபோட்டுக் கொண்டனர். இதை அடிப்படையாக கொண்டு தான் அந்த விளம்பரமும் எடுக்கப்பட்டிருக்கும். விளம்பரத்தின் முடிவில் இரண்டு பெண்களுக்கும் சல்யூட் கூறி மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ நிறைவு பெற்றிருக்கும்.

Also Read : பாலின பேதத்தை உடைத்த பெருமை... பார்பர் ஷாப் நடத்தி வரும் சகோதரிகள்...!

சமூகத்தில் ஆண், பெண் என்ற பேதம் எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும் இந்த விளம்பரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஜோதி மற்றும் நேஹா சலூன் கடைக்கு நேரில் சென்று பாராட்டி உள்ளார்.



மேலும் பார்பர் ஷாப்பில் பெண்களை பார்த்தது பெருமை அடைய செய்கிறது. அவர்களுக்கு எனது மரியாதையும், ஜில்லெட் நிறுவனம் அளித்த உதவித்தொகையும் கொடுத்தது சந்தோஷம் அளிப்பதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

Also Watch:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: