ஆஷஸ் தொடரில் சதமடிக்காத விராட் கோலி! வைரலாகும் ரசிகரின் கிறுக்குத்தனமான பதிவு

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே மட்டுமே நடக்கும் போட்டி என்பதால் அதில் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை.

Vijay R | news18-tamil
Updated: August 2, 2019, 7:53 PM IST
ஆஷஸ் தொடரில் சதமடிக்காத விராட் கோலி! வைரலாகும் ரசிகரின் கிறுக்குத்தனமான பதிவு
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே மட்டுமே நடக்கும் போட்டி என்பதால் அதில் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை.
Vijay R | news18-tamil
Updated: August 2, 2019, 7:53 PM IST
கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரின் சாதனையும் அடுத்து வரும் வீரர்கள் முறியடிப்பது வழக்கமான ஒன்று தான். டான் பிராட்மேன், சச்சின் என அனைத்து வீரர்களின் சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகிறது.

டெஸ்ட் போட்டிகளில் போட்டி போட்டு கொண்டு ரன்களை குவிப்பதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஸ்மித்தும் வல்லவர்கள்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித், டேவிட் வார்னர் தென்னாப்பிரக்கா அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டனர். ஓராண்டு தடைக்கு பின் உலகக் கோப்பையை தொடர்ந்து, ஆஷஸில் இருவரும் களமிறங்கி உள்ளனர்.


தடைக்கு பின் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் களமிறங்கிய ஸ்மித் சதம் அடித்து கோலியின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி 123 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்திருந்தார். ஸ்மித் 118 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து அசத்தி உள்ளார்ஓராண்டு தடைக்கு பின் சூப்பர் கம்பேக் கொடுத்த ஸ்மித்தை அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலர் புகழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே கிரிக்கெட் ரசிகர் ஒருவர் விராட் கோலியையும், ஸ்மித்தையும் இணைத்து பதிவு செய்த ட்வீட் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் கேலி செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.அஹமது என்ற ரசிகர் ஒருவர் ஸ்மித் ஆஷஸ் தொடரில் 9 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே மட்டுமே நடக்கும் போட்டி என்பதால் அதில் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை.

இதனால் அவரின் ட்வீட்டிற்கு பலர் கிண்டலான பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...