ரன்வீர் சிங் நடித்த ‘83’ என்ற 1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி குறித்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதன் ஸ்பெஷல் திரையிடல் தொடர்பாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஒரு கலகல பேட்டியளித்தார்.
1983 உலகக்கோப்பையை வென்ற தருணத்தை நமக்கும் காட்டும் எண்ணத்துடன் ஓய்வறை சுவாரசியங்களுடன் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக யாருமே பார்க்க முடியாத, வீடியோ ஸ்ட்ரைக் தினமான அன்று கபில்தேவ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடித்த காவிய இன்னிங்ஸ் 175 நாட் அவுட் குறித்த உள்தகவல்கள் இந்தத் திரைப்படத்துக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்துள்ளது.
இந்த சிறப்புத் திரையிடல் தொடர்பாக கபில்தேவ் அளித்த சுவாரஸ்ய பேட்டியில், ஆம் அன்றைய இரவு வெறும் வயிற்றுடன் டின்னர் சாப்பிடாமல்தான் உறங்க நேரிட்டது. அன்று இரவு விருந்து முடிந்த பின் கையில் கொடுக்கப்பட்ட பில் பயங்கரம் என்று நகைச்சுவையாக கூறினார் கபில்தேவ். மேலும் உலகக்கோப்பையை வென்றது இன்னும் கூட புதிர்தான் என்றார்.
இரவு முழுதும் வீரர்கள் அனைவரும் பார்ட்டிதான், கொண்டாட்டம்தான், எல்லாம் முடிந்து சாப்பிடலாம் என்று போனால் எல்லா உணவகங்களும் முடிந்து விட்டது. இதனால் வீரர்களுக்கு வேறு வழியில்லை வெறும் வயிறுடன் தான் சென்று படுத்தோம். ஆனால் யாரும் உணவைப்பற்றி கவலைப்படவில்லை, உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியே வயிற்றை நிரப்பி விட்டது.
நாட்டுக்காக வரலாறு படைத்ததே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது என்றார் கபில்தேவ். 83 திரைப்படத்தில் கபில் தேவ் ரோலில் நடித்த ரன்வீர் சிங்குக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது, குறிப்பாக கபில்தேவின் பவுலிங் ஆக்ஷனை திருப்பி செய்வது சாதாரண விஷயமல்ல, சச்சின் டெண்டுல்கர் முதற்கொண்டு அனைவரும் அதை எப்படிச் செய்யப்போகிறாய் என்று ரன்வீர் சிங்கிடம் கேட்டனர்.
ஆனால் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி கோச் எடுத்துக் கொண்டதோ இல்லையோ, இந்த கபில் ரோலை செய்ய ரன்வீர் சிங் கோச்சிங் எடுத்துக் கொண்டார்.
இன்று இந்தியா முழுதும் 83 திரைப்படம் வெளியாகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ranveer Shah, Bollywood, Cricket, ICC world cup