Home /News /sports /

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று ஏன் ஓய்வு பெற்றோம்?- தோனி, தன் ஓய்வு குறித்து ரெய்னா

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று ஏன் ஓய்வு பெற்றோம்?- தோனி, தன் ஓய்வு குறித்து ரெய்னா

ஆகஸ்ட் 15 ஓய்வு பெற்ற தோனி, ரெய்னா

ஆகஸ்ட் 15 ஓய்வு பெற்ற தோனி, ரெய்னா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எம்.எஸ்.தோனியும் சுரேஷ் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். நேரம் கூட நன்றாக நினைவில் உள்ளது. இரவு 7:29க்கு இரட்டை ஓய்வு அறிவிப்பு கிரிக்க்ட் உலகை உலுக்கிய தினம் ஆகஸ்ட் 15.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எம்.எஸ்.தோனியும் சுரேஷ் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். நேரம் கூட நன்றாக நினைவில் உள்ளது. இரவு 7:29க்கு இரட்டை ஓய்வு அறிவிப்பு கிரிக்க்ட் உலகை உலுக்கிய தினம் ஆகஸ்ட் 15.

    இது தொடர்பாக ரெய்னா அப்போது கூறும்போது, “ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு பெற வேண்டும் என்று இருவருமே முன் கூட்டியே திட்டமிட்டோம். தோனியின் ஜெர்சி எண் 7, என்னுடைய ஜெர்சி எண் 3, சேர்த்தால் 73, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆடுகள் நிறைவு என்று எல்லாம் ஒன்று சேர்ந்த தினம் அன்று. எனவே இதை விட சிறந்த நாள் அமையாது என்று ஓய்வு பெற்று விட்டோம்.

    தோனி 2004-ல் டிசம்பர் 23ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக சிட்டகாங்கில் தன் கரியரை தொடங்கினார், நான் 2005-ல் ஜூலை 30ம் தேதி இலங்கைக்கு எதிராக தொடங்கினேன். இருவரும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் தொடங்கினோம், ஆடினோம், சிஎஸ்கேவில் இணைந்து இத்தனையாண்டுகள் இருந்தோம். நாங்கள் ஒன்றாக ரிட்டையர் ஆனோம், ஐபிஎல் ஒன்றாக ஆடுவோம்” என்று அப்போது கூறினார் ரெய்னா. பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் சர்ச்சைக்குரிய விதத்தில் இருவர்ம் பிரிந்தனர்.

    பிறகு 2021-ல் ரெய்னா மீண்டும் சிஎஸ்கேவுக்கு ஆடினார், ஆனால் 2022 ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகாமல் முடிந்தார். சின்னதல என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரெய்னாவை விட்டது குறித்து சிஎஸ்கே ரசிகர்களுக்கே கோபாவேசம் இருந்தது.

    ஆனால் தோனியின் கரியர் இன்னும் லைவ் ஆக இருக்கிறது, 2023 ஐபிஎல் தொடரிலும் அவர் சிஎஸ்கே கேப்டனாக இருப்பார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Independence day, MS Dhoni, Raina

    அடுத்த செய்தி