• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • அஸ்வின் பவுலிங் பற்றி இந்த ஒரு விஷயம் கோலிக்குத் தெரியுமா?

அஸ்வின் பவுலிங் பற்றி இந்த ஒரு விஷயம் கோலிக்குத் தெரியுமா?

அஸ்வின்

அஸ்வின்

டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பிய பிறகு அஸ்வின் வலது கை பேட்டர்களுக்கு 71 பந்துகள் வீசியிருக்கிறார், இதில் 51 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார், அனைத்தையும் விட வலது கை பேட்டர்களுக்கு முக்கியமாக பவுண்டரியே கொடுக்கவில்லை என்பதுதான்.

 • Share this:
  2017-க்குப் பிறகு அஸ்வினை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஒழித்தார், ஆனால் மீண்டும் டி20 அணிக்குள் தேர்ந்தெடுத்த அஸ்வினைமீண்டும் டி20 உலகக்கோப்பை 2021 தொடரில் முக்கியமான, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் உட்கார வைத்து தன் வன்மத்தைக் காட்டினார் கோலி என்ற விமர்சனங்கள் எழுந்தன.

  ஆனால் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையிலேயே 2வது வார்ம் அப் போட்டிக்கு கேப்டன்சி செய்த போது அஸ்வினை கொண்டு வந்து தொடக்கத்தில் வீச வைத்தார், அதில் ஒரு தோனி டச் தெரிந்தது, அஸ்வினும் வார்னர், மிட்செல் மார்ஷ் விக்கெட்டைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா எழும்ப முடியாமல் படுதோல்வி அடைந்தது, ஆனால் பெரிய முரண் என்னவெனில் ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

  அஸ்வினுக்கு வாய்ப்பளித்து ஒருவேளை அவர் பாபர் அசாமையும் ரிஸ்வானையோ தொடக்கத்தில் வீழ்த்தியிருந்தால் ஒருவேளை இந்தியா பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்திருக்குமோ என்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதே போல் கொஞ்சமாவது ஃபைட் கொடுத்திருக்கலாம் என்ற நம்பிக்கையையும் அஸ்வின் ஏற்படுத்தியிருப்பார் என்பதையும் சிந்திக்காமல் இருப்பது கடினம்.

  இந்நிலையில் அஸ்வின் பவுலிங் பற்றி ஈஎஸ்பிஎன் - கிரிக் இன்போ இணையதளம் வெளியிட்டுள்ள ஒருபுள்ளி விவரம் மிகவும் சுவாரசியமானது. டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பிய பிறகு அஸ்வின் வலது கை பேட்டர்களுக்கு 71 பந்துகள் வீசியிருக்கிறார், இதில் 51 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார், அனைத்தையும் விட வலது கை பேட்டர்களுக்கு முக்கியமாக பவுண்டரியே கொடுக்கவில்லை என்பதுதான்.

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 23 ரன்களையே விட்டுக்கொடுத்திருந்தார், நேற்று தொடரை 2-0 என்று வெல்ல அஸ்வினின் 4 ஓவர் 19 ரன் 1 விக்கெட் மேலும் பெரிய பங்களிப்பு செய்துள்ளது.

  பொதுவாக ஆஃப் ஸ்பின்னர் என்றால் இடது கை பேட்டர்கள் கஷ்டப்படுவார்கள் என்று பொதுவாக நம்பப்பட்டது போக வலது கை பேட்ஸ்மென்களுக்கு எதிராக மீண்டும் டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இவ்வாறு பவுண்டரியே கொடுக்காமல் வீசியிருக்கிறார் என்ற புள்ளி விவரம் யாருக்குத் தெரிய வேண்டுமோ இல்லையோ கோலிக்கு நிச்சயம் தெரிய வேண்டும்.

  அஸ்வின் பவுலிங் பற்றி மார்டின் கப்டில் கூறிய போது, ‘அவரை அடித்து ஆடுவது கடினம், அத்தனை தினுசான பந்துகளை வீசுகிறார், லைன் லெந்தில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை, மேலும் அஸ்வின் பெரிய அளவில் மோசமாக வீசி நான் பார்த்ததில்லை” என்றார். ஆனால் விராட் கோலிக்கு என்னவோ அவர் ஒரு மோசமான பவுலராகவே தெரிகிறார் போலும் டெஸ்ட் போட்டிகளிலும் உட்கார வைத்து அகமகிழ்ந்தார்.

  இப்போது அஸ்வின் கடின உழைப்புகளுக்கு இடையே அற்புதமாக டெலிவரி செய்யும் நிலையை பந்துக்கு பந்து மாற்றுகிறார். பிளைட், லூப், கேரம் பால் என்று அனைத்தும் சரியாக வீசப்படுகிறது, எப்போதும் அப்படித்தான் வீசி வருகிறார், கோலி ஒருவேளை ஸ்லிப்பில் நின்று கொண்டு கோணலாகப் பார்த்திருப்பாரோ என்னவோ? அதனால் தான் அஸ்வினின் தொல்லை கொடுக்கும் லைன் மற்றும் லெந்த் அவருக்கு தெரியாமல் போனதோ என்னவோ?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: