உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட இங்கிலாந்து அணியில் 7 பேர் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற இந்த போட்டியில் ஆட்டம் டிராவில் முடிந்து, சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்து பவுண்டரிகளின் எண்ணிக்கையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய பெருமை சேர்த்த இந்த அணியில் 7 பேர் அயல்நாட்டவர்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
இதன் மூலம் சொந்த நாட்டை விட்டு, மாற்று நாட்டுக்கு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற வித்தியாசமான சாதனைக்கு மோர்கன் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அடில் ரஷீ மற்றும் மொயின் அலியின் பூர்வீகம் பாகிஸ்தானாகும். ஜேசன் ராய், டாம் குர்ரன் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். இங்கிலாந்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர். த்ரிலிங்கான சூப்பர் ஓவரை ஆர்ச்சர் மேற்கிந்திய தீவுகளை பூர்விகமாக கொண்டவர்.
Also Read :சாதனை முதல் சோதனை வரை... உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 10 சுவாரஸ்யஸ்கள் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.