Home /News /sports /

என்ன நடக்குது அங்க? பிசிசிஐ-யிடமிருந்து 7 மிஸ்டுகால் - நீ தான் பொறுப்பேத்துக்கணும் - அளந்துவிடும் ரவி சாஸ்திரி

என்ன நடக்குது அங்க? பிசிசிஐ-யிடமிருந்து 7 மிஸ்டுகால் - நீ தான் பொறுப்பேத்துக்கணும் - அளந்துவிடும் ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் கேப்டன் எம்.எஸ்.தோனி அத்ரதையாக இந்திய அணியை கழற்றி விட்டு ஒரு தோல்விக்குப் பிறகு கேப்டன்சியை உதறிய தருணம். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராகக் கேட்டுக் கொள்ளப்பட்டார், அதைப்பற்றி இப்போது கார்டியன் ஊடக நேர்காணலில் அளந்து விடுகிறார் ரவி சாஸ்திரி.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது, நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறந்த ஒரு காலக்கட்டமாக அமைந்தது. ஜான் ரைட் அல்லது கேரி கிர்ஸ்டனைப் போல் சாஸ்திரியிடம் ஐசிசி கோப்பை இல்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் (இரண்டு முறை) மற்றும் இங்கிலாந்தில் (இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது) வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.

2014 ஆம் ஆண்டு அணி இயக்குநராக தன்னை நியமிக்க வழிவகுத்த சூழ்நிலைகளைப் பற்றி பேசுகையில், சாஸ்திரி தனக்கு 'எச்சரிக்கை எதுவும் வரவில்லை' என்றார்.

“எனக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. நான் இந்தியாவின் [2014] இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஓவல் மைதானத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்தேன், ஆறு அல்லது ஏழு மிஸ்டு கால்களைக் கண்டேன். இங்கே என்ன நடந்தது?'. [பி.சி.சி.ஐ.] அப்போது கூறியது: 'நாளை முதல், எந்த நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.' நான் அவர்களிடம் சொன்னேன், நான் எனது குடும்பம் மற்றும் வணிக பங்காளிகளுடன் பேச வேண்டும் என்று சொன்னேன், ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் சரிசெய்வதாகச் சொன்னார்கள். அதுபோல நான் வர்ணனையிலிருந்து நேராக உள்ளே வந்தேன். நான் இந்த அமைப்பில் [ODIகளின் போது] சேர்ந்தபோது, ​​நான் ஜீன்ஸ் மற்றும் லோஃபர்களில் இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உடனடியாக என் வேலையே மாறியது.

எங்களிடமிம் வலையில் 160 கிமீ வேகத்தில் 16 அடியிலிருந்து பந்தை எறியும் பயிற்சியாளர்கள் இருந்தார்கள். வீரர்கள் இதிலிருந்து நழுவ முடியாது. நான் ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று பார்வையிடுவேன், எந்த வீரராக இருந்தாலும் அது யாராக இருந்தாலும் இந்த த்ரோ பந்தை எதிர்கொண்டாக வேண்டும். பயங்கரமாக எறிவார்கள், வீரர்கள் அசிங்கமாக ஆடுவார்கள். ஆனால் வலையில் அசிங்கமாக ஆடுவது பற்றி கவலைப்பட கூடாது. இங்கிலாந்தில் ரன்கள் வராது நாம் தான் ஒர்க் அவுட் செய்து சேர்க்க வேண்டும்.

பவுலர்களிடத்திலும் அதே கதைதான், இங்கிலாந்தில் நிச்சயம் ஏதாவது ஒரு செஷனில் 5 விக்கெட்டுகள் சரியும். ஆஸ்திரேலியாவிலோ, இங்கிலாந்திலோ ஸ்பின்னில் வெற்றி பெற முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். வேகப்பந்து வீச்சாளர்கள், ஆக்ரோஷம் பும்ரா போன்றவர்களால்தான் வெல்ல முடியும் என்று அறிவோம். எக்ஸ்பிரஸ் வேகம் தேவையில்லை ஆனால் அணுகுமுறை வேண்டும்” இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.
Published by:Muthukumar
First published:

Tags: Ravi Shastri

அடுத்த செய்தி